சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

ஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது!'

Added : அக் 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது!'

ஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது!'

நெல்லை மாவட்டம், நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணனை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ்., இரண்டாம் கட்ட பிரசாரம் செய்தார்.முன்னீர்பள்ளம், கிருஷ்ணாபுரத்தில் அவர், 'ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளதாக ஸ்டாலின் கூறி வருகிறார். 'அவரது சாவிற்கு காரணமே, அவர்கள் தான். ஜெயலலிதா மீது, பொய் வழக்கு போட்டு, அவருக்கு தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி, சிறைக்கு அனுப்பினர். ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட மன உளைச்சலால் தான், அவர் மரணமடைந்தார். அதற்கு கருணாநிதி, ஸ்டாலின், சிதம்பரம் தான் காரணம். ஜெ., ஆன்மா அவர்களை சும்மா விடாது. அவரது ஆன்மா தான், சிதம்பரத்தை சிறைக்கு அனுப்பியுள்ளது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'ஜெயலலிதா என்ன சாதாரண ஆளா... முதல்வரா தானே இருந்தாங்க! அவங்க மேலே, பொய் வழக்கு போட்டிருந்தால், அதை நிரூபித்து, தண்டனையில் இருந்து வெளிவந்திருக்கலாமே...' எனக் கூற, மற்ற நிருபர்கள் அதை ஆமோதித்து தலையசைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
23-அக்-201908:06:23 IST Report Abuse
Darmavan நிருபர்கள் சொல்வது தவறு...நீதி காங்கிரஸ்/திமுகவுக்கு சாதகமாகவே இருக்கிறது. எந்த கேஸ் எடுத்தாலும் திமுக தடை ஆணை /எது கேட்டாலும் ,கோருவது சுலபமாக கிடைக்கிறது..நடு இரவில் பிணத்தை மெரீனாவில் புதைக்க இடம் கோர்ட் எப்படி கொடுத்தது..புதிய செயலக கட்டிட விசாரணை என்ன ஆயிற்று.அதெப்படி விசாரிக்காமலேயே ஒருவன் குற்றமற்றவன் என்று தீர்மானிக்க முடிகிறது கோர்ட்டால்.ஜெயா பதவியிலுருந்தாலும் கோர்ட் யாருக்கு சாதகம் என்பதே.முடிவு செய்யும் விஷயம்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-அக்-201905:55:57 IST Report Abuse
D.Ambujavalli ஒரு கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் அத்தனையிலும் நீண்ட காலம் விசாரணை, வாதங்களுக்குப்பின் தீர்ப்பு கிடைத்திருக்கையில், அவ்வழக்கையே பொய் வழக்கென்று கூறி, கோர்ட்டின் இறையாண்மையையே நிந்தித்ததாக முதல்வர் அவதூறு வழக்குக்கு கூட ஆளாகலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X