ஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது! - Jayalalitha | Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

ஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது!'

Added : அக் 22, 2019 | கருத்துகள் (2)
ஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது!'

ஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது!'

நெல்லை மாவட்டம், நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணனை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ்., இரண்டாம் கட்ட பிரசாரம் செய்தார்.முன்னீர்பள்ளம், கிருஷ்ணாபுரத்தில் அவர், 'ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளதாக ஸ்டாலின் கூறி வருகிறார். 'அவரது சாவிற்கு காரணமே, அவர்கள் தான். ஜெயலலிதா மீது, பொய் வழக்கு போட்டு, அவருக்கு தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி, சிறைக்கு அனுப்பினர். ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட மன உளைச்சலால் தான், அவர் மரணமடைந்தார். அதற்கு கருணாநிதி, ஸ்டாலின், சிதம்பரம் தான் காரணம். ஜெ., ஆன்மா அவர்களை சும்மா விடாது. அவரது ஆன்மா தான், சிதம்பரத்தை சிறைக்கு அனுப்பியுள்ளது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'ஜெயலலிதா என்ன சாதாரண ஆளா... முதல்வரா தானே இருந்தாங்க! அவங்க மேலே, பொய் வழக்கு போட்டிருந்தால், அதை நிரூபித்து, தண்டனையில் இருந்து வெளிவந்திருக்கலாமே...' எனக் கூற, மற்ற நிருபர்கள் அதை ஆமோதித்து தலையசைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X