விழித்துக் கொள்ளுங்கள்

Added : அக் 22, 2019
Advertisement
விழித்துக் கொள்ளுங்கள்


விழித்துக் கொள்ளுங்கள்



ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மத போதகர்கள், மத குருக்கள், ஹுரியத் உட்பட, பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அப்பாவி காஷ்மீர் மக்களின் பிள்ளைகளை மூளை சலவை செய்து, அவர்கள் பலியாககாரணமாக இருக்கின்றனர். எனவே, மக்கள் இனியாவது விழித்து,மாநிலத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும்.சத்யபால் மாலிக்கவர்னர், ஜம்மு - காஷ்மீர்


சீண்டியவர்களை விடமாட்டோம்



எந்த நாட்டின் மீதும், தேவையின்றி இந்தியா தாக்குதல் நடத்தியது இல்லை. ஆனால், எங்களை சீண்டியவர்கள் யாராக இருந்தாலும், தக்க பதிலடி தர தவறியதில்லை. மும்பை தாக்குதலைப் போன்று, மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேற அனுமதிக்க மாட்டோம். நம் இந்திய கடல் பகுதிகள் அனைத்தும், கடற்படை வீரர்களின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளன.ராஜ்நாத் சிங்ராணுவ அமைச்சர், பா.ஜ.,


வெட்கக்கேடானது



பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, 2017ல், நாடு முழுவதும், 3.5 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 56 ஆயிரம் வழக்குகள், உத்தர பிரதேசத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில், உ.பி., முதலிடம் வகிக்கிறது. இது வெட்கக்கேடானது. பிரியங்காபொதுச் செயலர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X