ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் ரூ.2.31 கோடி சொத்துக்கள் பறிமுதல்

Added : அக் 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

இந்துார், :மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிக்கு சொந்தமான, கணக்கில் வராத, 2.31 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்ய, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.ம.பி.,யில், முதல்வர் கமல்நாத் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், ஷிவ்தத் பாண்டே, 63, என்பவர், தோட்டக்கலை துறையில், இணை இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2011ல் புகார் எழுந்தது. இதையடுத்து, லோக் ஆயுக்தா போலீசார், ஷிவ்தத் பாண்டேவுக்கு சொந்தமான இடங்களில், 2011ல் சோதனை நடத்தினர். அப்போது, இவரது குடும்பத்தினர் பெயரில், கணக்கில் வராத அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், ஷிவ்தத் பாண்டே, பணி ஓய்வு பெற்றார்.இந்த வழக்கை, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

ஷிவ்தத் பாண்டேவின் மனைவியின் பெயரில், தேவாஸ் மாவட்டத்தில், மருந்து தயாரிப்பு நிறுவனம் இருப்பது தெரியவந்தது. மேலும், அவரது குடும்பத்தினர் பெயரில், இந்துார் மாவட்டத்தில், இரண்டு நிலங்கள், ஒரு பால் பண்ணை, 3.49 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.57 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பு நிதி, 15.18 லட்சம் ரூபாய் இதர வைப்பு தொகை உட்பட, 2.31 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்ய, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
23-அக்-201910:49:26 IST Report Abuse
நக்கீரன் லோக் ஆயுக்தாவை ஏன் தமிழகத்தில் அமைக்க மறுக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெள்ள தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் பல லட்சம் கோடிகள் மக்களின் பணம் அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் அதிகாரிகளால் கொள்ளையடிக்கப்பட்டு பதுக்கப்பட்டு உள்ளது. மோடிஜி அதில் கவனம் செலுத்துவாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X