பொது செய்தி

இந்தியா

' மோடியின் சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது

Updated : அக் 24, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (27+ 46)
Advertisement
மோடி,சிந்தனை,ஆச்சரியப்படுத்துகிறது

புதுடில்லி: ''நாடு குறித்தும், அரசு நிர்வாகம் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனைகள் தனித்துவமானவை; ஆச்சரியப்படுத்து கின்றன,'' என, பொருளாதாரத்துக்கான நோபல்பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, அமெரிக்க வாழ் இந்திய பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, 58, தெரிவித்தார்.

அமெரிக்க வாழ் இந்தியரான, பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி உட்பட மூன்று பேர், இந்தாண்டுக்கான பொருளாதார நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


சர்ச்சை



அதன்பிறகு, இந்தியப் பொருளாதாரத்தை விமர்சித்து அவர் கருத்து கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், பா.ஜ., தேசியச் செயலர் ராகுல் சின்ஹா ஆகியோர், பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டுவந்தனர்.இந்தாண்டு லோக்சபாவுக்கு நடந்த தேர்தலின்போது, 'வறுமை கோட்டுக்கு கீழுள்ளோருக்கு, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கும், 'நியாய்' எனப்படும் திட்டத்தை செயல்படுத்துவோம்' என, காங்., தலைவராக இருந்த ராகுல் அறிவித்தார்.

இந்த திட்டத்தை வகுத்து கொடுத்தது, அபிஜித் பானர்ஜி.அதனால், அபிஜித் பானர்ஜியின் திட்டம் குறித்து, பியுஷ் கோயல் விமர்சித்து கருத்து வெளியிட்டார். 'வெளிநாட்டைச் சேர்ந்தவரை இரண்டாவதாக திருமணம் செய்பவர்களுக்கே நோபல் பரிசு கிடைக்கிறது' என, ராகுல் சின்ஹா சர்ச்சை கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த மற்றொரு பேட்டியில், 'அரசு, 100க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிவிக்கின்றன. அதனால், திட்டங்களை பார்த்து மக்கள் ஓட்டு போடவில்லை; மோடி என்ற தனிநபருக்காகவே ஓட்டு கிடைத்துள்ளது.

'மாற்றாக ஓட்டு போடுவதற்கு எதிர்தரப்பில் ஆளில்லாததால், மோடிக்கு ஓட்டு கிடைத்தது' என, அபிஜித் பானர்ஜி கூறியிருந்தார்.இவ்வாறு கடந்த சில நாட்களாக, மத்திய அரசை விமர்சித்து அபிஜித் பானர்ஜியும், அவரை விமர்சித்து, பா.ஜ., சார்பிலும் அறிக்கைகள் வெளியிட்டு வந்தன.


அனுபவம்



இந்த நிலையில், அபிஜித் பானர்ஜி, பிரதமர் மோடியை, டில்லியில் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் கூறியதாவது:பிரதமர் மோடியுடனான சந்திப்பு புதிய அனுபவமாக இருந்தது. அரசு நிர்வாகம் குறித்து அவர் விளக்கியது ஆச்சரியப்படுத்தியது.'அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளே, அரசு குறித்த எண்ணமாக மாறுகிறது.

அரசு நிர்வாகம் குறித்து சாதாரண மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்போது, நிர்வாகத்தை பணக்காரர்கள், அதிகாரமிக்கவர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகின்றனர்.'அதனால், மக்களுக்கு என்ன தேவை, அவர்களுடைய விருப்பங்கள் என்ன என்பதை உணர்ந்து செயல்படும் வகையில், அரசு நிர்வாகத்தை மாற்றி வருகிறேன்' என, பிரதமர் மோடி என்னிடம் கூறினார்.

இந்தப் பிரச்னையில் இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. அரசு அறிவிக்கும் பல்வேறு திட்டங்களை மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால், அதற்கு பின்னால் உள்ள சிந்தனை, நோக்கத்தை அறிந்து கொள்வதில்லை.புதிய அனுபவம் கொடுத்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் 'மோடிக்கு எதிரானவர் என்று உங்களை சித்தரிக்கும் ஊடங்களின் வலையில் சிக்கி விடாதீர்கள்' என்று சிரித்தபடி கூறினார். அவர், அனைத்தையும் கவனிக்கிறார் என்பது இதில் இருந்து தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


சாதனைகளுக்காக பாராட்டு



நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, அபிஜித் பானர்ஜிக்கு, பிரதமர் மோடி வாழ்த்துகூறியிருந்தார்.இந்த நிலையில், நேற்று அபிஜித் பானர்ஜி உடனான சந்திப்புக்குப் பின், சமூக வலைதளத்தில் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நோபல் பரிசு பெற உள்ள அபிஜித் பானர்ஜி உடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. மனித குலத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் அவருக்கு தொலைநோக்குப் பார்வை உள்ளது.

பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாகவும், ஆரோக்கியமான முறையிலும் விவாதித்தோம். அவருடைய சாதனைகளுக்காக இந்தியா பெருமைப்படுகிறது. எதிர்காலசாதனைகளுக்காக அவருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27+ 46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
23-அக்-201919:55:13 IST Report Abuse
PANDA PANDI ஹா ஹா. உங்களை மட்டுமல்ல. இந்திய மக்களையும் மோடியின் சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது.
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
23-அக்-201916:37:06 IST Report Abuse
ramanathan பிரதமர் உத்தமர் மோடியை பற்றி புத்திசாலி இந்தியர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருந்ததாலேயே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
23-அக்-201916:37:03 IST Report Abuse
தங்கை ராஜா மிரட்டலா மெஸ்மெரிசமா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X