பொது செய்தி

இந்தியா

தேர்வுக்கு தயாராகும் பள்ளிகள் காஷ்மீர் மாணவர்கள் கவலை

Added : அக் 22, 2019
Advertisement

ஸ்ரீநகர், :காஷ்மீரில் உள்ள பள்ளிகளில், பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படாத நிலையில், ஆண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை, மத்திய அரசு ஆகஸ்டில் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தடை உத்தரவுமொபைல் போன், இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

பல பகுதிகளில் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால், பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன; நீண்ட நாட்களுக்கு பின்னரே திறக்கப்பட்டன. மாணவர்களுக்கான பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை. இந்நிலையில், ஆண்டு தேர்வுக்கான அட்டவணையை வெளியிட, காஷ்மீர் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், மாணவர்களும், பெற்றோரும் கவலை அடைந்து உள்ளனர். இது குறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், 50 சதவீத பாடங்கள் தான் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.இது போன்ற சூழ்நிலையில், ஆண்டு தேர்வை அறிவிப்பது சரியாகஇருக்காது.எவ்வளவு பாடங்கள் நடத்தப்பட்டு உள்ளனவோ, அவற்றில் மட்டும் கேள்விகள் வரும்படி வினாத்தாள்களை தயாரித்தால் நன்றாக இருக்கும். அதே நேரத்தில், ஆண்டு தேர்வு நடத்தாவிட்டால், இந்த ஆண்டு முழுவதும் வீணாகி விடும்; மாணவர்களின் நலன் பாதிக்கப்படும். காஷ்மீர் நிர்வாகம், இதை கவனத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஊழியர்களுக்கு சம்பளம்ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் தனித்தனியூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வரும், 31ல் இருந்து, இதற்கான நடவடிக்கைகள் துவங்கவுள்ளன. இதற்கிடையே, 'இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X