ரயில்வே அதிகாரிகளிடம் சி.பி.ஐ., விசாரணை

Added : அக் 22, 2019
Advertisement

புதுடில்லி, :டெண்டரில் நடந்த முறைகேடு தொடர்பாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே அதிகாரிகள் ஆறு பேருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம், பிரோஜ்பூர் ரயில்வே டிவிஷனுக்கு உட்பட்ட பல இடங்களில், எல்.இ.டி., விளக்குகள் அமைப்பது, 'ஏசி' கருவி பொருத்துவது உள்ளிட்ட பல பணிகளுக்காக, 2014 - 2016 வரை, 17 டெண்டர்கள் கொடுக்கப்பட்டன; இவற்றின் மொத்த மதிப்பு, 5.62 கோடி ரூபாய்.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, கே.கே., என்ற நிறுவனம், இந்த டெண்டர்களை பெற்றது.
இதில் முறைகேடு நடந்ததாகவும், ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய, சி.பி.ஐ., அதிகாரிகள், பிரோஜ்பூர் ரயில்வே எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்கள் சுனில் குமார், நீரஜ் சர்மா உள்ளிட்ட, ரயில்வே உயர் அதிகாரிகள் ஆறு பேர் மீது, ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X