பொது செய்தி

இந்தியா

சொத்து சேர்ப்பதில் இந்தியர்கள் சாதனை: இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு இரட்டிப்பானது

Updated : அக் 24, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
சொத்து, சேர்ப்பு, இந்தியர்கள், சாதனை, இந்தியா, குடும்பங்கள், சொத்து மதிப்பு ,இரட்டிப்பானது, சொத்து சேர்ப்பு

மும்பை: இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு, நடப்பு ஆண்டில் இரட்டிப்பாகி இருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, கிரெடிட் சுயிஸ் வங்கி, இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு குறித்து, ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.ஒரு பக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், 5.8 சதவீதமாக குறைந்திருக்க, இன்னொரு பக்கம் குடும்பங்களின் சொத்து மதிப்பு, இரு மடங்கு அதிகரித்து உள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


நான்கு மடங்குஇது குறித்து, ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு ஆண்டில், இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு, 12.6 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 894 லட்சம் கோடி ரூபாய்.இதுவே, கடந்த ஆண்டில், இந்திய குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு, 5.97 லட்சம் கோடி டாலராக இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் இது, 424 லட்சம் கோடி ரூபாய்.இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு, 2000 - -2019ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த வளர்ச்சியை வைத்து பார்க்கும்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும், 43 சதவீதம் அளவுக்கு சொத்து மதிப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கலாம். அதாவது, 312 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு அதிகரிக்கும்.நடப்பு ஆண்டில், சராசரியாக, தனிநபர் ஒருவரின் சொத்து மதிப்பு, 10.34 லட்சம் ரூபாய். இது, 3.3 சதவீதம் அதிகரிப்பு. அதே சமயம், கடன், 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது.நிதி சொத்துக்கள், 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நிதி அல்லாத சொத்துக்கள், 6.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, சந்தை நிலையற்று இருப்பதை உணர்த்துகிறது.


ஐந்தாவது இடம்கிட்டத்தட்ட, 4,500 பேர், 355 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். 1,790 பேர், 710 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வைத்துள்ளனர்.உலகளவில், மிக அதிக சொத்து வைத்திருக்கும் தனிநபர் கொண்ட நாடுகள் வரிசையில், இந்தியா, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.இவ்வாறு வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சொத்து என்பது நிதிச் சந்தைகளில் மட்டுமின்றி ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் செய்யப்படும் முதலீடுகளையும் உள்ளடக்கியே வங்கியால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், ரியல் எஸ்டேட் மந்த நிலையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.மேலும், இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு குறித்த பல்வேறு தரவுகளை ஆய்வறிக்கை வெளியிட்டிருப்பினும், சொத்து மதிப்பு இரட்டிப்பானதற்கான காரணம் எதையும் வங்கி குறிப்பிடவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
23-அக்-201912:15:41 IST Report Abuse
pattikkaattaan இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர்களை கணக்கில் கொண்டு இந்த ஆய்வறிக்கை வந்ததா என்று தெரியவில்லை.. நடுத்தர குடும்பங்களின் நிலை இன்று படுமோசம்.. ஒவ்வொரு மாதமும் வாங்குகிற சம்பளத்திற்குள் குடும்பம் நடத்த முடியாமல் தாளம் போடவேண்டியுள்ளது.. கல்விக்கட்டணம், எரிபொருள் , ஆடைகள் போன்றவை விலை அதிகரித்து கையை சுடுகின்றன.. முன்பெல்லாம் கல்யாண விசேங்களுக்கு ரூ 50, 100 மொய் வைத்த நிலை மாறி இன்று ரூ 500 , 1000 மொய் வைக்கவேண்டிய நிலை .. எல்லா இடங்களிலும் கவுரவம் வேறு பார்க்க வேண்டியுள்ளது.. முன்பெல்லாம் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு பக்கத்தில் உள்ள கடையில் துணி எடுத்து கொடுத்தால் போதும், இன்றைக்கு பெரிய மாலுக்கு அழைத்துச்சென்று பிராண்டட் ஐட்டம் எடுத்து கொடுக்கவேண்டியுள்ளது.. இதுல ஆடி , அம்மாவாசைன்னு தள்ளுபடின்னு விளம்பரம் கொடுத்து உயிரை எடுக்கிறார்கள்.. ஒவ்வொரு மாதமும் சமாளிப்பதற்குள் கண்ணாமுழி பிதுங்கிவிடுகிறது .. இருக்கிற ஒரு வீடும், கல்விக்கடனுக்காக வங்கியில் அடமானத்துல கெடக்குது .. இதுல ஒருவருஷத்துல சொத்து ரெண்டுமடங்கா பெருகிடுச்சாம்.. கொள்ளைதான் அடிக்கணும் .. போங்கய்யா ..
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
23-அக்-201908:43:37 IST Report Abuse
J.Isaac சொத்து எப்படி சேர்த்தார்கள் என்பது தான் முக்கியம்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-அக்-201907:26:39 IST Report Abuse
ஆரூர் ரங் பணமதிப்பிழப்புக்குப் பிறகு வருடங்களாக கருப்புப்பண ரியல் எஸ்டேட் படுத்து அதனால் பலரின் சொத்து மதிப்பு இறங்கிவிட்டது .அவசரத்துக்கு வீடுகளை விற்றால் வாங்க ஆளில்லை வாங்கி ஆளில்லா சொத்துக்கு மதிப்பேது ? ஊழல் பணத்தில் பினாமியாக ரியல் எஸ்டேட் வாங்கிய அரசியல்வாதி அரசு அதிகாரிகள் விற்கத்தயாராக இல்லை .ஆனால் ஒட்டுமொத்த கட்டுமானத்துறையே சரிவதால் குடும்ப விழாக்களுக்காக சிறிய வீடுகள், மனை, ஃபிளாட்டுகளை விற்கமுனையும் சாதாரணர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஏழுவருடங்களாக தங்கமுதலீட்டில் ஆண்டுக்கு மூன்று விழுக்காடு கூட வருமானமில்லை .பணவீக்கம் குறைவதால் வங்கி வட்டியும் இந்த புத்தாண்டில் 10.5% லிருந்து 6.75%ஆகிவிட்டது ,வருமானமே குறைந்தாலும் மக்கள் கேட்ஜெட்டுகளை வாங்கிக்குவிப்பது நிற்கவில்லை. இந்த சூழ்நிலையில் எப்படி குடும்பச்சொத்து அதிகரித்திருக்கும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X