சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாநில தகவல் ஆணையர் கோவையில் விசாரணை

Added : அக் 22, 2019
Advertisement

கோவை:மாநில தகவல் ஆணையர் விசாரணை, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.அரசு அலுவலகங்களில் தகவல் கோரும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு, அந்தந்த பொது தகவல் அலுவலர்கள் உரிய காலத்தில் பதில் அளிக்க வேண்டும். பதில் அளிக்காத பட்சத்தில், இது தொடர்பான வழக்குகள், மாநில ஆணையத்தில் மேல் முறையீடு செய்யப்படுகின்றன.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் கிடைக்காத நிலையில், மாநில ஆணையத்தில் தொடரப்பட்ட 5 வழக்குகளை, நேற்று தகவல் ஆணையர் முருகன் விசாரித்தார். 2 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விசாரணையில், ஆணையர் முன்னிலையில், மனுதாரர்கள், வக்கீல்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராகினர். மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவு, பொது கணக்கு பிரிவு, மண்டல அலுவலகங்களின் பொது தகவல் அலுவலர்கள் ஆஜராகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X