எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

அதிரடி காட்டும் மத்திய அரசு: வேகமெடுக்கும் மின் திட்டங்கள்

Updated : அக் 23, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement
அதிரடி காட்டும், மத்திய அரசு, வேகமெடுக்கும்,மின் திட்டங்கள்

மத்திய அரசின், அதிரடி நடவடிக்கைகளை அடுத்து, தமிழகத்தில், மின் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டுள்ளது.

மத்திய அரசு, நகரங்களில், தடையில்லாமல் மின் வினியோகம் செய்ய, ஒருங்கிணைந்த மின் மேம்பாடு என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.இதே திட்ட பணிகள், கிராமங்களில், தீன்தயாள் உபாத்யாயா என்ற பெயரில் செய்யப்படுகின்றன. இரு திட்டங்களும், 2014ல் துவங்கின.


உதவித்தொகைஅத்திட்டங்களின் கீழ், மின் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்த, புதிதாக துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில், ஒருங்கிணைந்த மின் திட்டத்தை, 1,695 கோடி ரூபாயிலும்; தீன்தயாள் திட்டத்தை, 924 கோடி ரூபாயிலும் மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

திட்ட நிதியில், 60 சதவீத தொகை, மத்திய அரசின் உதவி தொகை; 30 சதவீதம், மத்திய நிதி நிறுவனங்களின் கடன். மீதி, மின் வாரியத்தின் சொந்த நிதி.நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திட்டங்களை முடித்து விட்டால், கடனில் பாதி தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை. இல்லையெனில், முழு தொகையையும் வட்டியுடன் செலுத்த வேண்டும்.

அதன்படி, இரு திட்டங்களையும், நடப்பாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க அவகாசம் வழங்கப் பட்டது.ஆனால்,தமிழக மின் வாரியம், அதற்குள் முடிக்கவில்லை. தமிழகத்தில், 2018 இறுதியில், 'கஜா' புயல் வீசியது. இதனால், 12 மாவட்டங்களில், மின் கம்பங்கள் உள்ளிட்ட சாதனங்கள் சேதமடைந்தன.இதையடுத்து, மத்திய மின் திட்டங்களுக்காக வாங்கிய உபகரணங்களை, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வாரியம் பயன்படுத்தியது.

கஜா புயலை காரணம் காட்டி, தீன்தயாள், ஒருங்கிணைந்த மின் திட்டகளை முடிக்க, வாரியம் சார்பில், மத்திய அரசிடம் அவகாசம் கேட்கப்பட்டது.அதன்படி, செப்., வரை அவகாசம் வழங்கப் பட்டது. இருப்பினும், திட்ட பணிகளை முடிக்கவில்லை.


விசாரிப்புஇந்நிலையில், அந்த திட்டங்களின் நிலை குறித்து, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில மின் வாரிய அதிகாரிகளையும், மத்திய மின் துறை அதிகாரிகள், இம்மாதம், 16ம் தேதி, டில்லிக்கு அழைத்து விசாரித்தனர்.இது குறித்து, மத்திய மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, 2009ல், திருத்திய மின் திட்டத்தின் கீழ், நகரங்களில், மின் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளை துவக்கியது.

அத்திட்டத்தை, தமிழகத்தில், 110 நகரங்களில் மேற்கொள்ள, 3,696 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டது.திட்டத்தை, 2012ல் முடிக்க திட்டமிட்ட நிலையில், மின் நுகர்வோர் சேவை மையம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பணிகளை, இதுவரை முடிக்கவில்லை. நிதி செலவழித்ததிலும் முறைகேடுகள் நடந்தன.


அறிக்கை கேட்புஇதே நிலை, ஒருங்கிணைந்த மற்றும் தீன்தயாள் திட்டத்திலும் ஏற்படக் கூடாது என்பதில், மத்திய அரசு, கவனமாக உள்ளது. இதனால், பணிகளை முடிக்க, டிச., வரை, அவகாசம் கேட்டும், இதுவரை, முறைப்படியான ஒப்புதல் அளிக்கவில்லை.மிக விரைவில், பணிகளை முடித்து, அதன் அறிக்கையை தருமாறு தெரிவித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

இது குறித்து, தமிழக மின் வாரிய உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரு திட்டங்களிலும், 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன; துணை மின் நிலையங்களில், டிரான்ஸ்பார்மர் பொருத்த வேண்டிய பணி மட்டும் உள்ளது; இந்த பணிகள், மிக விரைவில் முடிக்கப்படும்' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
25-அக்-201921:57:28 IST Report Abuse
ஆ.தவமணி,   அத்துடன் '' மின் வழித்தடங்கள் ஏற்படுத்துவதற்கெதிரான எந்த ஒரு வழக்கையும், எந்த ஒரு நீதிமன்றமும் விசாரணை்க்கே எடுத்துக்கொள்ளக்கூடாது '' என்று சட்டத்திருத்தமும் செய்யப்பட வேண்டும்.. ஊர்ல உள்ள 100 காடுகளின் வழியாப என் காட்டுக்கு மின்சாரம் வரும்.. ஆனா.. என் காட்டு வழியாக என் அண்ணனின் காட்டுக்கும், தம்பியின் காட்டுக்கும் மின்சாரம் போகக்கூடாது.. னு கேஸ் போடுபவர்கள் நாங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Anumanthan Gnanasekaran - Lusaka,ஜாம்பியா
23-அக்-201917:20:11 IST Report Abuse
Anumanthan Gnanasekaran இந்தியாவிலேயே மிக அதிகமான ஊழல் நிறைந்த மின் வாரியம் தமிழ்நாடு மின்சார வாரியம் தான். இது அனைவருக்கும் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
23-அக்-201908:27:47 IST Report Abuse
svs வருமானம் இருந்தால் விரைவாக பணி நடக்கும் .... எப்போதுமே மத்திய அரசு திட்டம் என்றால் இங்குள்ள அதிகாரிக்கு வருமானம் கிடைக்க வாய்ப்பு குறைவு ......அப்புறம் எப்படி வேலை நடக்கும் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X