பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீருக்கான சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு : கீழடி அகழாய்வில் கிடைத்த புது ஆச்சரியம்

Updated : அக் 23, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (4)
Advertisement
குடிநீர், சுடுமண் குழாய்,கண்டுபிடிப்பு,கீழடி,அகழாய்வு, புது ஆச்சரியம்

சென்னை: கீழடி அகழாய்வுக் குழிகளை மூடும்போது, மேம்பட்ட சுடுமண் குழாய் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், கீழடியில், இதுவரை, ஐந்து கட்டங்களாக அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன.முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை, மத்திய தொல்லியல் துறையும், அடுத்த, இரண்டு கட்ட அகழாய்வுகளை,தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண்டன.ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகள், கடந்த வாரத்தில் முடிந்தன. அதனால், அகழாய்வுக் குழிகளை, தார்ப்பாய்களால் மூடி, மண் கொட்டும் பணிகள் நடந்தன.

அப்போது, அகழாய்வுக் குழி ஒன்றின், 52 செ.மீ., ஆழத்தில், 20 செ.மீ., விட்டமுள்ள வாய்ப் பகுதியுடன் கூடிய, 60 செ.மீ., நீளமுள்ள, சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. அது, இரண்டு குழாய்களால் இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொன்றிலும், தலா, 5 விளிம்புகள் இருந்தன. குழாயை உறுதியாக்கி, பாதுகாப்பான தண்ணீரை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த விளிம்புகள், பார்வைக்கு, சுருள் வடிவத்தில் உள்ளன. இக்குழாய் ஒன்றின் வாய்ப் பகுதியில், வடிகட்டும் வகையில், மூன்று துளைகள் இடப்பட்டுள்ளன.

இந்த குழாய்களின் கீழ்ப்பகுதியிலும், அகழாய்வு செய்யப்பட்டது. அப்போது, பீப்பாய் வடிவிலான, மூன்று, சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு, ஒரே குழாயாக இருந்தது. அதன் வாய்ப் பகுதியிலும், வடிகட்டி பொருத்தப்பட்டிருந்தது. வடிகட்டப்பட்ட நீர் செல்லும் குழாயின் இறுதிப் பகுதி, இரண்டடுக்கு பானைக்குள் செல்கிறது.

இவ்வாறு, ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும், வெவ்வேறு விதமான இரண்டு சுடுமண் குழாய்களுக்கும், வெவ்வேறு பயன்பாடு இருந்திருக்க வேண்டும்.இந்த வடிகால் குழாய்களின் கீழ்ப்பகுதியை அகழாய்வு செய்தபோது, சுடுமண் கூரை ஓடுகள் பதிக்கப்பட்ட தரைப்பகுதி காணப்பட்டது.

இது, தண்ணீரை எளிதாக வடிய வைக்கும் திறந்தவெளி அமைப்பாக இருக்கலாம்.தமிழக அகழாய்வுகளில், இதுவரை கிடைக்காத வகையிலான, இந்த வடிகால் அமைப்புகளின் பயன்கள் குறித்து, அடுத்த கட்ட அகழாய்வுகளில் தான் தெரிய வரும்.மேலும், அந்த பகுதியை தொடர்ந்து ஆய்வு செய்த போது, கூரை ஓடுகள் அடுக்கப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றின் தொடர்ச்சியில், செங்கல் கட்டடப் பகுதி இருந்தது.அது, இரண்டாம் கட்ட அகழாய்வின் போது கண்டறியப்பட்ட, கட்டடப் பகுதியின் தொடர்ச்சி. அதன் தொடர்ச்சியை, அடுத்த கட்ட அகழாய்வில் தான் கண்டறிய முடியும்.

'கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ள, இந்த சுடுமண் குழாய்கள் மற்றும் கட்டடப் பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.'சங்க காலத்தில், வைகை நதிக்கரையில் வாழ்ந்த தமிழர்களின் நீர் மேலாண்மை, கட்டடக்கலை, தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்த, பல்வேறு தகவல்கள் வெளிப்படும்' என, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

இது, தமிழக வரலாற்றின், புதிய திருப்பங்களுக்கு மிகப்பெரிய சான்றுகளாக இருக்கும் என்பதால், அடுத்தகட்ட அகழாய்வக்காக, வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


மதுரை தமிழ் சங்கத்தில்கீழடி தொல்பொருட்கள்



கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை, மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த,
தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி, சமீபத்தில் நிறைவடைந்தது; அகழாய்வுக் குழிகள் மூடப்பட்டு விட்டன. ஆறாம் கட்ட அகழாய்வுக்கான அனுமதியை, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்திடம், தமிழக அரசு கோரியுள்ளது.இந்நிலையில், கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை, அங்கேயே காட்சிப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

அதையேற்ற தமிழக தொல்லியல் துறை, கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை, பலரும் பார்க்கும் வகையில், மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.பார்வையாளர்களின் வருகையை பொறுத்து,
கண்காட்சி நடத்தும் நாட்களை முடிவு செய்ய, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
23-அக்-201914:56:36 IST Report Abuse
s.rajagopalan பழம் பெருமை ...பொதுமய்யா ? இதெல்லாம் பட்டி மன்றத்துக்கு வச்சுக்குங்க இன்னைக்கு உங்க வீட்டு குழாயில் தண்ணீர் வருதா ? அதுதான் மாட்டரு
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
23-அக்-201912:24:40 IST Report Abuse
pattikkaattaan "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை.." சங்கம் வளர்த்த தமிழனின் வரலாறு கண்டிப்பாக ஒருநாள் வெளியில் வந்தே தீரும் .. எப்படி இருந்த தமிழன் இன்று இப்படி குணம்கெட்டு டாஸ்மாக்- கில் கிடப்பதை பார்த்து வருத்தமாக உள்ளது ..
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-அக்-201908:30:22 IST Report Abuse
Bhaskaran இன்று வளர்ந்துள்ளதாகபெருமைபேசும் நாடுகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே புதைசாக்கடைஅமைத்து கழிவுநீரை மாடியில் இருந்து ஊருக்கு வெளியில் கொண்டுசேர்த்த ஒரு மாபெரும் நாகரீகத்தின் சொந்தக்காரன் தமிழன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X