கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எழும்பூர் கோர்ட்டில் வைகோ ஆஜர்

Added : அக் 22, 2019
Advertisement

சென்னை, மூன்று வழக்குகள் தொடர்பாக, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.கடந்த, 2018, அக்டோபரில், நக்கீரன் வார இதழில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குறித்து, செய்தி வெளியாகி இருந்தது. இது தொடர்பாக, அந்த இதழின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார்.விசாரணைக்காக அவர், சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில், வைக்கப்பட்டு இருந்தார். அவரை சந்திக்க, வைகோ முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தியதால், காவல் நிலையம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வைகோ மீது, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப் பட்டுள்ளது. அதேபோல, எழும்பூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டது மற்றும் மெரினா கடற்கரையில், தடையை மீறி ஊர்வலம் சென்றது தொடர்பாகவும், அவர் மீது, எழும்பூர் நீதிமன்றத்தில், இரு வழக்குகள் உள்ளன.இந்த வழக்குகள் நேற்று, மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, வைகோ ஆஜரானார். அவரிடம் கேள்விகள் எழுப்பி, அதை வாக்குமூலமாக பதிவு செய்த மாஜிஸ்திரேட், மூன்று வழக்குகளின் விசாரணையை, 13ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X