அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினருக்கு முதல்வர் அறிவுரை

Updated : அக் 23, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 அ.தி.மு.க.,வினருக்கு முதல்வர் அறிவுரை

சென்னை, விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின், ஓட்டு எண்ணிக்கையின்போது, கட்சி முகவர்கள், மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும்' என, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளனர்.அவர்களது அறிக்கை:நாளை நடக்கும், ஓட்டு எண்ணிக்கையின்போது, ஓட்டு எண்ணிக்கை முகவர்கள், காலை, 6:00 மணிக்கே, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு செல்ல வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள, 'சீல்' முறையாக உள்ளதா என்பதை, உறுதி செய்ய வேண்டும்.பதிவான ஓட்டுகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் ஓட்டுகளும், ஒரே மாதிரி உள்ளனவா என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடியும்போதும், ஒவ்வொரு வேட்பாளருக்கும், எத்தனை ஓட்டுகள் கிடைத்துள்ளன என்பதை, எழுதி வைத்து, அதை தேர்தல் அதிகாரியிடம் சரி பார்க்க வேண்டும்.ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டிருப்போர், மாற்று கட்சியினருக்கு ஆதரவாகவோ, முறைகேடாகவோ செயல்படுகின்றனரா என்பதை, கண்காணிக்க வேண்டும். குறை இருந்தால், மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து, தீர்வு காண வேண்டும்.தி.மு.க.,வினர் தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் கைதேர்ந்தவர்கள். எனவே, விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். தவறு நடந்தால், மேல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடிந்து, முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே, முகவர்கள் அங்கிருந்து வெளியே வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
23-அக்-201914:29:13 IST Report Abuse
TAMILAN ஒரு விவசாய சாமானியன் தமிழனின் ஆட்சி. நன்று
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
23-அக்-201906:00:46 IST Report Abuse
s.maria alphonse pandian பாம்பின் கால் பாம்பறியும்....இவர்கள் என்ன செய்வார்கள் என திமுகவினருக்கு தெரியும்.. திமுகவினர் என்ன செய்வார்கள் என்பது இவர்களுக்கு தெரியும்.
Rate this:
Share this comment
Natarajan Attianna - Coimbatore,இந்தியா
23-அக்-201910:49:45 IST Report Abuse
Natarajan Attiannaஓ குட்டையில் ஊறிய மட்டைகள் தானே நீங்க எந்த குட்டைலே ஊறுனீங்க சார் நான் இன்னும் ஊறவில்லே...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-அக்-201905:59:06 IST Report Abuse
Mani . V "விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின், ஓட்டு எண்ணிக்கையின்போது, கட்சி முகவர்கள், மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். நமக்கு எதிரான தீர்ப்பு வருவது மாதிரி இருந்தால் பேருந்துகளை எரிக்கவும், கடைகளை சூறையாடவும், பொதுமக்களை தாக்கவும் தயாராக இருக்க வேண்டும்".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X