சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து கடவுள்களை இழிவாக பேசிய காரப்பன் மீது வழக்கு பதிவு

Added : அக் 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

கோவை:ஹிந்து கடவுள்களை இழிவாக பேசிய காரப்பன் மீது பீளமேடு போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகையில் உள்ள, 'காரப்பன் சில்க்ஸ்' உரிமையாளர் காரப்பன், கோவையில் நடந்த கருத்தரங்கில், அத்திவரதர் மற்றும் கிருஷ்ணர் பற்றி இழிவாக பேசினார். இவரை கைது செய்ய வலியுறுத்தி, ஹிந்து அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. 'ஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பனை கைது செய்ய வேண்டும்; அவர், கோவிலில், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில், கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, ஹிந்து இயக்கங்கள் போர்க்கொடி உயர்த்தின. இஸ்லாமியர்களும் காரப்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து காரப்பன் மீது பீளமேடு போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத கலவரத்தை துாண்டும் வகையில் பேசியது, இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் வகையில் பேசியது என இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
23-அக்-201901:11:12 IST Report Abuse
uthappa இவனுக்கு கொடுக்கிற தண்டனைக்கு, இனி ஒருபோதும் எந்த மதத்தினரும், மற்ற மதத்தினரின் மனதை புன் படுத்தும்படி நடக்க முடியாமல் போக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X