ஹிந்து அமைப்பு மனு உச்ச நீதிமன்றம் அனுமதி

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019
Advertisement
ஹிந்து அமைப்பு மனு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடில்லி, அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், தங்களுடைய அறிக்கையை, எழுத்து மூலமான வாதமாக ஏற்க வேண்டும் என்ற ஹிந்து அமைப்பின் கோரிக்கையை, உச்சநீதிமன்றம் ஏற்றது.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள நிலம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.





அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் எதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்க வேண்டும், தங்களுடைய முக்கிய கோரிக்கை என்ன என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, அனைத்து தரப்புக்கும் அமர்வு உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், நிர்வானி அகாடா என்ற ஹிந்து அமைப்பின் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் கூறியதாவது:நிர்வானி அகாடா, ஒரு வாதியாக வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி அறிக்கை தாக்கல் செய்வது குறித்து தவறாக புரிந்து கொண்டு விட்டோம்.எங்களுடைய தரப்பை விளக்கும் வகையில் அறிக்கையை, எழுத்து மூலமான வாதமாக ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.அதை ஏற்ற நீதிமன்றம், உடனடியாக தாக்கல் செய்ய அனுமதி அளித்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X