சிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின்: அமலாக்கத்துறை காவல் தொடரும்

Updated : அக் 24, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (7)
Advertisement
சிதம்பரம், ப.சிதம்பரம், ஐ.என்.எக். மீடியா, ஜாமின்,  சி.பி.ஐ., அமலாக்கத்துறை, காவல், உச்சநீதிமன்றம்,  சிபிஐ, சுப்ரீம் கோர்ட், மத்திய நிதி அமைச்சர், p.chidambaram , chidambaram, INX Media, Enforcement directorate, CBI, Supreme court,

புதுடில்லி : 'ஐ.என்.எக்ஸ். மீடியா' ஊழல் தொடர்பாகசி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் காங்.கைச் சேர்ந்த முன்னாள் மத்தியஅமைச்சர் சிதம்பரத்துக்குஉச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதேநேரத்தில் இதே வழக்கில்அமலாக்கத் துறையின் காவலில் உள்ளதால் அவரால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம்மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டைப் பெறுவதற்கு 2007ல் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது மத்திய நிதி அமைச்சராகஇருந்த காங். மூத்த தலைவர்களில் ஒருவரான சிதம்பரம் அனுமதி அளித்ததில் ஊழல் நடந்துஉள்ளதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன.இந்த வழக்கில் ஆக. 21ல் சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்து விசாரித்தது. பிறகு நீதிமன்றக் காவலில் டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்தவழக்கில் சிதம்பரம் அவருடைய மகன் உள்பட பலர் மீது சி.பி.ஐ.சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.ஜாமின் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி ஆர். பானுமதி தலைமையிலான அமர்வு அவருக்கு ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது.

அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பி செல்வார் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருப்பார் போன்ற சி.பி.ஐ.யின் வாதங்களை ஏற்க முடியாது. அதேபோல் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்பதையும் ஏற்க முடியாது. இதற்கு முன்பு ஆறு முறைஅவருடைய காவலை நீட்டித்தபோது இது குறித்து ஒரு வார்த்தைக் கூட ஏன் குறிப்பிடவில்லை.இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் ஜாமினில் உள்ளனர். அதனால் ஒரு லட்சம் ரூபாய் சொந்த ஜாமின் மற்றும் அதே தொகைக்கு இரண்டு பிணைகளுடன் அவருக்கு ஜாமின் வழங்கலாம்.

வேறு வழக்குகளில் அவர் கைது செய்யப்படாதநிலையில் டில்லியில்உள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமின் அளிக்கலாம்.மேலும் தனது பாஸ்போர்ட்டை அவர் விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். விசாரணை அமைப்பு அழைக்கும்போதெல்லாம் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முன் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளக் கூடாது.

இந்த தீர்ப்பு இந்த வழக்குக்கானது மட்டுமே. இந்த ஊழல் தொடர்பாக தொடரப்பட்டுள்ள மற்ற வழக்குகளுக்கு பொருந்தாது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.சிதம்பரத்தின் ஜாமினை மறுத்த டில்லி உயர் நீதிமன்றம்'அவர் வெளிநாடு தப்பிச் செல்வார் மற்றும் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை' என்று கூறியது.

நீதிமன்றத்தின் இந்தக் கருத்தை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு இருந்தது. அந்த மனுவை நீதிபதி பானுமதி அமர்வு தள்ளுபடி செய்தது.ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்துக்கு தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில்இது தொடர்பாக நடந்த பண மோசடி வழக்கில் அவரை அக்.,24ம் தேதி காவலில் எடுத்துஅமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அதனால் தற்போதைக்கு சிதம்பரம் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


பதில் அளிக்க உத்தரவுமஹாராஷ்டிர மாநிலம்மும்பையைச் சேர்ந்த '63 மூன்ஸ் டெக்னாலஜி' என்ற நிறுவனம் சிதம்பரம் மற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக 10 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு அவதுாறு வழக்கு தொடர்ந்துஉள்ளது. இது குறித்து எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி சிதம்பரம் மற்றும் அதிகாரிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான 'நேஷனல் ஸ்பாட் எக்சேஞ்ச் லிமிடெட்' தனியார்பங்குச் சந்தை தொழிலில் ஈடுபட்டிருந்தது. அப்போது 5600 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் விசாரணையில் அது உண்மையில்லை என்பது தெரியவந்தது.தன்னை பழிவாங்கும்வகையில் சிதம்பரம் மற்றும் இரண்டு அதிகாரிகள் செயல்பட்டதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது. தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதையடுத்து சிதம்பரம் உள்ளிட்டோர் மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-அக்-201906:05:38 IST Report Abuse
meenakshisundaram சின்னப்பயல் ' (முக கொடுத்த பட்டம் ?) சிதம்பரத்தை வெளியே விடுங்க .தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தணும் ?
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
23-அக்-201917:29:26 IST Report Abuse
krishna இவனும் இவன் பேமிலி மொத்தமும் மிக பெரிய கொள்ளை கூட்டம் மாத்திரம் இல்லை மிக பெரிய தேச விரோதிகள்.முடிஞ்ச வரை கொள்ளை அடித்து விட்டான். ஆனால் இவன் தமிழ் நாட்டுக்காக ஒண்ணுமே செய்தது இல்லை. அதனால்தான் எல்லோருமே இவன் jaili இருப்பதை பார்த்து மிக்க மகிஸ்ச்சி adaigirargal
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
23-அக்-201909:20:26 IST Report Abuse
Appan இந்த ஆள் 50 வருடம் அரசியலில் இருக்கிறார்..அதுவும் முக்கிய மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உள்ளார்..இவரை ஜெயிலில் போட்டதை ..யாரும் கண்டுக்கவில்லை.. மாற்றாக பெரும்பாலோர் ஆதரிக்கிறார்கள்.. சந்தோசப்படுகிறார்கள்.. இப்படி ஒரு அரசியல்வாதி இருக்க முடியுமா..மாரராக வைகோவை ஜெயிலில் போட்டால் போராட்டம், ஏன்.சிலர் தீ குளிக்கிறார்கள்... அப்போ சிதம்பரம் கடைந்து எடுத்த சுயலவாதி..அதிகாரத்தை சொந்த நலனுக்கு உபயோகித்தார்..இப்படியும் அரசியல்வாதி இருக்க முடியுமா..?..யாராவது எம்ஜியார், முகவை இப்படி செய்ய முடியுமா.?..
Rate this:
Share this comment
Sridhar - Jakarta,இந்தோனேசியா
23-அக்-201914:26:06 IST Report Abuse
Sridharஅவர் குற்றவாளி நிரபராதி என்பதை தவிர்த்து, என்றுமே அவர் மக்கள் தலைவர் இல்லை. ஆனாலும் ஒன்றை பாராட்டவேண்டும். கிட்டத்தட்ட கட்டு குடும்பம் தேற்றினத்தை போல தேற்றிவிட்டு, அதன் சுவடு ஒண்ணுமே வெளியே தெரியாத படி இவ்வளவு நாளா வேஷ்டி கட்டிக்கிட்டு வலம்வந்தாரு பாரு சும்மா சொல்லக்கூடாதுய்யா ஆளு பலே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X