சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எரிந்த ஏ.டி.எம்.,களில் பணம் பத்திரமாக மீட்பு

Updated : அக் 23, 2019 | Added : அக் 22, 2019
Advertisement
எரிந்த ஏ.டி.எம்.,களில் பணம் பத்திரமாக மீட்பு

தேனி: தேனியில் தீ விபத்தில் சிக்கிய எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., இரு மெஷின்களில் இருந்த பணம் பத்திரமாக மீட்கப்பட்டது.தேனி - - மதுரை ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இரண்டு மெஷின்கள் உள்ள எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., இயங்குகிறது. நேற்று முன்தினம் காலை 7:50 மணிக்கு மின் கசிவு காரணமாக தீ பற்றியது. தீயணைப்புத்துறை வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.மெஷின்களில் ரூ.22 லட்சம் வைக்கப்பட்டு இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 10:30 மணிக்கு மும்பையில் இருந்து தொழில்நுட்ப நிபுணர் வந்து 2 ஏ.டி.எம்., மெஷின்களை திறந்து கொடுத்தார். இயந்திரங்களில் இருந்த ரூபாய் நோட்டுக்களில் எந்த சேதாரமும் இல்லை. தண்ணீரில் நனைந்து இருந்தன. அவற்றை 2 சூட்கேஸ்களில் வங்கிக்கு எடுத்துச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X