சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.15 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு

Updated : அக் 23, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (14+ 23)
Advertisement
வங்கி ஊழியர்கள், வேலைநிறுத்தம், ரூ.15 ஆயிரம் கோடி, பரிவர்த்தனை, பாதிப்பு

சென்னை: பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் '10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும்' என ஆக. 31ல் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செப். 1ல் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.அதன் தொடர்ச்சியாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் இணைந்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர். சென்னை பாரிமுனையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:பொதுத்துறை வங்கிகளை இணைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.தமிழகத்தில் 35 ஆயிரம் ஊழியர்கள் உட்பட நாடு முழுவதும் மூன்று லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். வங்கி அதிகாரிகளும் தார்மிகஆதரவு அளித்துள்ளனர்.இதனால் சென்னையில் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏழு லட்சம் காசோலைகளும் நாடு முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 20 லட்சம் காசோலைபரிவர்த்தனைகளும்பாதிக்கப்பட்டன.

நாட்டிலேயே இரண்டாவது மிகப் பெரிய வங்கியாக உருவாக்கவே 10 வங்கிகள் இணைக்கப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது; இது ஆபத்தானது. பெரிய வங்கியாக உருவாக்கி பெரு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க முயற்சிக்கின்றனர். அந்த நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்தவில்லை எனில் வங்கியை மூட வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த இணைப்பு தேவை இல்லாதது. இதற்கு பதில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வராக்கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (14+ 23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-அக்-201920:19:40 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ பெரிய வங்கியாக உருவாக்கி பெரு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க முயற்சிக்கின்றனர். அந்த நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்தவில்லை எனில் வங்கியை மூட வேண்டிய நிலை ஏற்படும். //// இந்த சந்தேகத்தில் நியாயம் இருக்க வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை ...... இருந்தாலும் "அந்த அளவுக்கு தாங்கள் பணிபுரியும் வங்கியை லாபத்தில் உயர்த்தவேண்டும் ...... தகுதியில்லாத ஆனால் 'பின்புலம்' உள்ளவர்களுக்கு கடன் கொடுக்கப்படக் கூடாது" என்கிற அக்கறை, பொறுப்புணர்வு உள்ளவர்களா இந்த ஊழியர்கள் ??
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-அக்-201911:21:34 IST Report Abuse
Lion Drsekar அதே அலுவலகம் அதே சம்பளம் இதைவிட வேறு என்ன வேண்டும் இவர்கள் , பணி செய்வதோ வட்டிக்கடை, அப்படி இருக்க இதுபோன்ற இன்னல்களை பொதுமக்களுக்கு கொடுப்பது நல்லதல்ல. இது அரசியல் நோக்கில் நடத்தப்படும் விளையாட்டு.உண்மையான தகுதி இருந்தால் வேலையை இராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக வியாபாரம் செய்யுங்கள் அல்லது வேறு ஒரு வட்டிக்கடை ஆரம்பித்து நடத்திக்காட்டுங்கள், உங்கள் இடத்தில படித்த ஏழை எளிய மாணவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் அவர்களாவது நாட்டுக்கு பணியாற்றட்டும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
23-அக்-201911:15:54 IST Report Abuse
M S RAGHUNATHAN First of all derecognise the individual bank unions, which are controlled/headed by retired employees and also the AIBEA and BEFI, the Apex bodies of these bank unions which are under the control of Communists. I had interacted with many young employees in many banks banks who detest these union people but are scared of these people. The Workman directors wh were in the Bank's Board are also part of the loan sanction tem and keep quiet when big ticket loans were sanctioned. Have they at any part of time came out in and blew the whistle. These union leaders are பர்ஸிட்ஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X