'இந்திய அதிகாரிகள் யாரையும் காணோம்'

Added : அக் 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

இஸ்லாமாபாத் 'இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மூன்று பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களை பார்வையிட வந்த பல்வேறு நாட்டு துாதரக அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் ஒருவர் கூட வரவில்லை' என பாக். தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள இந்தியா - பாக். எல்லைப் பகுதியில் பாக். படையினர் கடந்த ஞாயிறு அன்று திடீர் தாக்குதல் நடத்தினர்.இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. 'இந்த தாக்குதலில் 6 முதல் 10 பாக். வீரர்கள் கொல்லப்பட்டனர். மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன' என நம் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.

இது குறித்து பாக். வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஜுரா மற்றும் ஷாகோட் பகுதிகளை பார்வையிட பல்வேறு நாட்டு துாதரக அதிகாரிகளை அழைத்து சென்றோம். அவர்களுடன் இந்திய துாதரக அதிகாரிகள் ஒருவர் கூட உடன் வரவில்லை.இந்திய ராணுவ தளபதியின் கூற்று வெறும் கூற்றாக மட்டுமே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
23-அக்-201908:55:32 IST Report Abuse
Indhuindian தாக்குதல் நடக்கவில்லை அப்டீன்னு ஒரு ஸ்டேட்மென்ட்டை விட்டுட்டு வுலகநாடுகளை எல்லாம் கூப்பிட்டு அங்கே இருக்கற பார்க்கு ஷாப்பிங் மால் அதையெல்லாம் காண்பிப்பாங்க அதையும் பிபிசி நியூயார்க் டைம்ஸ் போன்ற பாக்கிஸ்தான் கைக்கூலி மீடியாக்கள் இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என்று எழுதிவிடுவார்கள். அதுவும் நல்லதுதான் அவங்க அப்படியே சொல்லிக்கிட்டு இருக்கட்டும் நாம பாட்டுக்கு அவங்களை தாக்கி புரட்டி அடிச்சி எல்லா தீவிரவாத முகாம்களையெல்லாம் அடிச்சி ஒழிச்சிடுங்க ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜெய் வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X