விதியை பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி கருத்து: எம்.பி., மனைவிக்கு கண்டனம்

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
விதியை பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி கருத்து: எம்.பி., மனைவிக்கு கண்டனம்

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த காங்கிரஸ், எம்.பி.,யின் மனைவி, விதியை பாலியல் பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி, 'பேஸ்புக்'கில் எழுதிய பதிவு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள, எர்ணாகுளம் லோக்சபா தொகுதியை சேர்ந்த காங்., - எம்.பி., ஹிபி ஈடன். இவரது மனைவி, அனா லிண்டா ஈடன்.


latest tamil newsகேரளாவில், சமீபத்தில் பெய்த கனமழையில், எம்.பி., ஹிபியின் வீடு, மழை நீரில் மூழ்கியது.இந்நிலையில், அவரது மனைவி லிண்டா, சமூகவலைதளமான 'பேஸ்புக்'கில், பதிவு ஒன்றை, நேற்று முன்தினம் வெளியிட்டார்.அதில், 'விதி என்பது, பாலியல் பலாத்காரத்தை போன்றது. உங்களால் அதை எதிர்த்து போராட முடியவில்லை எனில், அதை அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள்' என குறிப்பிட்டார். அந்த பதிவின் கீழ், அவரது குழந்தை, மழை நீரில் இருந்து காப்பாற்றப்படும் காணொளியும், அவரது கணவரும், எம்.பி.,யுமான ஹிபி ஈடன், உணவை ரசித்து உண்ணும் காணொளியையும் பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவு, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லிண்டாவின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, நேற்று அந்த பதிவை நீக்கிய லிண்டா, 'தன் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், பெண்களை இழிவுபடுத்துவது தன் நோக்கம் அல்ல' எனவும் தெரிவித்து, தன்செயலுக்கு மன்னிப்பு கோரினார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
23-அக்-201916:11:17 IST Report Abuse
Subburamu Krishnaswamy She might have had such experience in her personal life. Ok That is her philosophy. No brainy people will compare rape with other events of crisis.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
23-அக்-201913:29:26 IST Report Abuse
Sridhar கேரளான்னாலே கொஞ்சம் கிளுகிளுப்பு தான்
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
23-அக்-201911:46:05 IST Report Abuse
pattikkaattaan இந்த கருத்து இந்தம்மாவின் சொந்த கருத்தாக தெரியவில்லை.. ஏனென்றால் இதற்க்கு முன்பு மருத்துவரீதியாக இந்த கருத்தை சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.. என்ன இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X