சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்சாகுபடிக்கு உழவுப்பணி.. மழையால் விவசாயிகள் சுறுசுறுப்பு

Added : அக் 23, 2019
Advertisement

தேவதானப்பட்டி : மழையால் கண்மாய்களுக்கு நீர்வரத்தால் ஜெயமங்கலம், சில்வார்பட்டி, சிந்துவம்பட்டி கிராமங்களில் முதல்போக நெல் சாகுபடிக்கு உழவுப்பணி துவங்கியது.

பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு வராகநதியில் வரும் நீரை மேல்மங்கலம் முத்தையாகோயில் அருகில் தடுப்பணைகட்டி கால்வாயில்கொண்டு வரப்படுகிறது. இதே போன்று சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய்க்கு வடுகபட்டி வெள்ளக்கரடு அருகில் வராகநதியில் தடுப்பணை கட்டி 8 கிலோ மீட்டர் துாரம் தனிக் வரத்துக்கால்வாய் மூலம் நீர் செல்கிறது.

மழையால்கடந்த சில நாட்களாக வராகநதியில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.இதனால் கண்மாய்களுக்கு நீர்வரத்துள்ளது.சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய் நிறைந்து மறுகால் மடை வழியாக நீர் வெளியேறுகிறது. இதன் காரணமாகஜெயமங்கலம், சிந்துவம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களில் முதல் போக நெல் சாகுபடிக்கு உழவுப் பணியை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X