பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீரை காய்ச்சி குடிக்க மக்களுக்கு அறிவுரை

Added : அக் 23, 2019
Advertisement

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடரும் மாறுபட்ட பருவநிலையால் சளி, இருமல், காய்ச்சல் தாக்கம் அதிகம் ஏற்படுகிறது. பாதிப்படைந்த பலரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஆற்றில் அதிக நீர் வரத்து ஏற்படுகிறது.

கடந்த பல மாதங்களாக ஆற்றில் குவிந்த கழிவுகள் நீருடன் அடித்து செல்லப்படுகிறது. இங்கு பல்வேறு கிராமங்களுக்கு குன்னுார் வைகை ஆற்றில் உறைகிணறுகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. அதிலிருந்து சுத்திகரிக்கப்படாத நீர் வினியோகம் செய்யப்படுவதால், குளோரின் கலக்கப்படுகிறது. அனைத்து இடங்களிலும் நிலவும் ஈரப்பதத்தால் கொசுக்கள், ஈக்கள் பெருக்கம் அதிகம் உள்ளது.

இந்நிலையில் ஏற்பட்டுள்ள சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. எனவே காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் நிலவேம்பு கஷாயத்தை தடுப்பு மருந்தாக பயன்படுத்தவும் சுகாதாரத்துறையினர் பொதுமக்களை வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X