தீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு

Added : அக் 23, 2019 | கருத்துகள் (4)
Advertisement
trump, ட்ரம்ப், தீபாவளி, கொண்டாட்டம், பங்கேற்பு,வெள்ளை மாளிகை கவர்னர்

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், நாளை(அக்.,24) தீபாவளி கொண்டாடுகிறார்.

தீபாவளி பண்டிகை, வருகிற 27ல், நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந் நிலையில், பராக் ஒபாமா, அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது, 2009 முதல், வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வழக்கத்தை துவங்கினார்.






இதையடுத்து, அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், 2017 - 18களில், தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கடந்த ஆண்டு நடந்த தீபாவளி கொண்டாட்டங்களின் போது, அமெரிக்காவுக்கான இந்திய துாதர் நவ்ஜீத் சிங்கை, அதிபர் டிரம்ப் அழைத்தார். இம்முறை மூன்று தினங்கள் முன்னதாக, நாளை நடைபெறவுள்ள தீபாவளி கொண்டாட்டத்தில், யார் யார் பங்கேற்கவுள்ளனர் என்பது பற்றி, தகவல் வெளியிடப்படவில்லை. அன்றைய தினம், வெள்ளை மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள், சில குறிப்பிட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள், முன்னிலையில், அதிபர் டிரம்ப் தீபாவளி கொண்டாடவுள்ளார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.






இதற்கிடையில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அபாட், கடந்த சனி அன்று, தீபாவளி கொண்டாடினார். அன்றைய தினம், கவர்னர் மாளிகை முழுவதும், அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.





Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-அக்-201911:29:17 IST Report Abuse
குமார் இவரும் மகாபலிபுரம் வந்து போன நல்லா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
23-அக்-201905:38:31 IST Report Abuse
Sanny ஒபாமா இந்திய மக்களிடம் வைத்திருந்த மதிப்பினால் தீபாவளி கொண்டாடினார், ட்ரம்ப் அதேமனநிலையில் கொண்டாடினால் நல்லதே, தேர்தல் வருது, கணிசமான இந்திய, இலங்கை மக்களின் வாக்குகள் கைப்பற்ற நோக்கில் கொண்டாடுவார் போல.
Rate this:
Share this comment
வால்டர் - Chennai,இந்தியா
23-அக்-201911:58:08 IST Report Abuse
வால்டர்என்னே ஒரு மனநிலை? இங்கே கழக கட்சிகள் தான் தாங்கள் சொல்வதை போல ஒட்டு வங்கி அரசியல் நடத்துவார்கள். அங்கே எல்லா மனிதர்களுக்கும் ஒரே மதிப்புதான்....
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
23-அக்-201903:51:08 IST Report Abuse
blocked user இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற பலர் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவு அவசியம் என்பதை மறுக்க முடியாது... ஆகவே இது போல கொண்டாடி இந்தியர்களின் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்துகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X