பொது செய்தி

தமிழ்நாடு

வீடு கட்ட பணி ஆணை; கலெக்டருக்கு குவியும் பாராட்டு

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மூன்று நாட்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 2000 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்காதது வீடு கட்டுவோருக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பது போன்ற செயல்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மூன்று நாட்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 2000 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.latest tamil newsதிருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்காதது வீடு கட்டுவோருக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பது போன்ற செயல்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கலெக்டர் கந்தசாமி 18ல் பி.டி.ஓ.க்கள் 'வாட்ஸ் ஆப்' குழுவில் 'பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை 21ம் தேதிக்குள் வழங்காவிட்டால் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவீர்' என எச்சரித்து 'ஆடியோ' பதிவு அனுப்பினார்.


latest tamil newsகலெக்டரின் அதிரடி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து மூன்று நாட்களில் 2000 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள 6000 பயனாளிகளுக்கு வீடு கட்ட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை மற்றும் அதிலுள்ள இடர்பாடு குறித்து கலெக்டர் கந்தசாமி நேற்று பி.டி.ஓ.க்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதே போல மக்கள் நலத் திட்டங்களில் மற்ற மாவட்ட கலெக்டர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
23-அக்-201920:23:38 IST Report Abuse
Sundar Appreciation to Dinamalar to publish messages about the collector and the Action taken by CM, Jegan
Rate this:
Cancel
saraswathi - Chennai,இந்தியா
23-அக்-201912:25:02 IST Report Abuse
saraswathi எங்களது மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா
Rate this:
Cancel
விமர்சகன் - kovai,இந்தியா
23-அக்-201912:03:27 IST Report Abuse
விமர்சகன் இன்னொரு சகாயம். இவரை போல் மற்ற மாவட்ட கலெக்டர்களும் செயல்படவேண்டும். இவரை பாராட்டும் விதத்தில் செய்தி வெளியிட்ட நம்ம தினமலருக்கு வாழ்த்துக்கள்.நேர்மையான அதிகாரிகளுக்கு எப்போதும் தினமலர் உறுதுணையாக நிற்கிறது.
Rate this:
Prabu.KTK - Coimbatore,இந்தியா
24-அக்-201915:28:26 IST Report Abuse
Prabu.KTKஇந்த கலெக்டர் உண்மையிலேயே நல்லவர். ஆனால் சகாயம் மத மாற்றும் பாவாடை கும்பல். தமிழ்நாட்டில் ஒழிக்க பட வேண்டியவை. ஜெய் ஹிந்த்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X