பொது செய்தி

இந்தியா

பல்கலை தரவரிசை பட்டியலில் ஐஐடி ஆதிக்கம்

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி: தேசிய அளவிலான சிறந்த பல்லைககளின் தர வரிசை பட்டியலை 'குவாக்குரெலி சைமன்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மும்பை - ஐ.ஐ.டி. முதலிடத்தை பிடித்துள்ளது.






ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த 'குவாக்குரெலி சைமன்ஸ்' என்ற ஆய்வு நிறுவனம் சர்வதேச அளவிலான கல்வி நிலையங்களின் தரப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதுபோல் நம் நாட்டில் உள்ள பல்கலைகளின் தர வரிசை பட்டியலையும் வெளியிடுகிறது. இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது 'இந்திய பல்கலை தர வரிசை - 2020' என்ற ஆய்வை நடத்தி அதுகுறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்படி மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் பயிற்சி மையம் இரண்டாவது இடத்தையும் டில்லி - ஐ.ஐ.டி. மூன்றாவது இடத்தையும் சென்னை - ஐ.ஐ.டி. நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.





காரக்பூர் - ஐ.ஐ.டி.க்கு ஐந்தாவது இடமும் கான்பூர் - ஐ.ஐ.டி.க்கு ஆறாவது இடமும் கிடைத்துள்ளது. இந்த தர வரிசை பட்டியலில் டில்லி பல்கலை ஏழாவது இடத்தையும் ஐதராபாத் பல்கலை எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. ரூர்கேலா - ஐ.ஐ.டி. ஒன்பதாவது இடத்தையும் கவுகாத்தி - ஐ.ஐ.டி. 10வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் சென்னை - அண்ணா பல்கலை 16வது இடத்தில் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விஜயலக்ஷ்மி சௌமியன் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-அக்-201911:01:31 IST Report Abuse
விஜயலக்ஷ்மி சௌமியன் சில ஆங்கில பத்திரிகைகள் தரவரிசை பட்டியலை தாமகவிட வெளியிடும் ஒவ்வொரு வருடமும் அட்மிசன் காலகட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக. அவற்றில் நான்கில் இருந்து ஏழாவது இடத்தில் சில தனியார் நிகர் நிலை நிறுவனங்கள் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். முதல் மூன்று இடங்களில் ஐ ஐ டி இருக்கும். அதாவது ஐ ஐ டி களுக்கு நிகரானவை அந்த தனியார் பல்கலைக்கழகங்கள் என்று ஒப்புவமைப்படுத்தயும் தமிழகத்தின் தலைசிறந்த அரசு பல்கலைக்கழகத்தை விட தனியார் நிறுவனங்கள் சிறப்பானவை என்று சொல்லி அவற்றிற்கு அட்மிசன் கூடுதல் கிடைக்கவும் பீஸ் வருமானம் பலமடங்கு அதிகரிக்கவும் செய்யும். இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. உண்மையான தரவரிசை செய்யும் பொது தான் தராதரம் வெளியில் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
23-அக்-201910:14:59 IST Report Abuse
தமிழ் மைந்தன் நாங்கள் டுமீலர்கள்... எனவே எங்களுக்கு மாற்று கல்வியறிவு தேவையில்லை... டாஸ்மாக் மற்றும் பிரியாணி உள்ளவரை எங்கள் தேசம் வாழும்..
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
23-அக்-201908:38:18 IST Report Abuse
தமிழ் மைந்தன் தமிழகத்தில் முன்னால் சாராய வியாபாரிகளும் இந்நாள் கல்வி தந்தைகளின் பல்கலைக்கழகங்களின் நிலை என்னவோ?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X