பல்கலை தரவரிசை பட்டியலில் ஐஐடி ஆதிக்கம்| IIT's dominate QS India ranking | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பல்கலை தரவரிசை பட்டியலில் ஐஐடி ஆதிக்கம்

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி: தேசிய அளவிலான சிறந்த பல்லைககளின் தர வரிசை பட்டியலை 'குவாக்குரெலி சைமன்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மும்பை - ஐ.ஐ.டி. முதலிடத்தை பிடித்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த 'குவாக்குரெலி சைமன்ஸ்' என்ற ஆய்வு நிறுவனம் சர்வதேச அளவிலான கல்வி நிலையங்களின் தரப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதுபோல் நம் நாட்டில் உள்ள பல்கலைகளின் தர வரிசை

புதுடில்லி: தேசிய அளவிலான சிறந்த பல்லைககளின் தர வரிசை பட்டியலை 'குவாக்குரெலி சைமன்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மும்பை - ஐ.ஐ.டி. முதலிடத்தை பிடித்துள்ளது.



latest tamil news



ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த 'குவாக்குரெலி சைமன்ஸ்' என்ற ஆய்வு நிறுவனம் சர்வதேச அளவிலான கல்வி நிலையங்களின் தரப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதுபோல் நம் நாட்டில் உள்ள பல்கலைகளின் தர வரிசை பட்டியலையும் வெளியிடுகிறது. இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது 'இந்திய பல்கலை தர வரிசை - 2020' என்ற ஆய்வை நடத்தி அதுகுறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்படி மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் பயிற்சி மையம் இரண்டாவது இடத்தையும் டில்லி - ஐ.ஐ.டி. மூன்றாவது இடத்தையும் சென்னை - ஐ.ஐ.டி. நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.


latest tamil news



காரக்பூர் - ஐ.ஐ.டி.க்கு ஐந்தாவது இடமும் கான்பூர் - ஐ.ஐ.டி.க்கு ஆறாவது இடமும் கிடைத்துள்ளது. இந்த தர வரிசை பட்டியலில் டில்லி பல்கலை ஏழாவது இடத்தையும் ஐதராபாத் பல்கலை எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. ரூர்கேலா - ஐ.ஐ.டி. ஒன்பதாவது இடத்தையும் கவுகாத்தி - ஐ.ஐ.டி. 10வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் சென்னை - அண்ணா பல்கலை 16வது இடத்தில் உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X