சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

Added : அக் 23, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 லஞ்ச ஒழிப்புத்துறை, ரெய்டு, பணம், பறிமுதல், விசாரணை

சென்னை : தமிழகத்தில் பல மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.50 லட்ச ரூபாய் பணம் சிக்கியது.

தமிழகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மதுரையில் கலால் வரி அலுவலர் மாரிமுத்து மதுக்கடைகளில் லஞ்சம் பெறும்போது மடக்கிப்பிடித்த அதிகாரிகள் அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.35 ஆயிரத்தை கைப்பற்றினர்.

திருப்பூரில் நடத்திய சோதனையில் பொங்குபாளையம் ஊராட்சி செயலாளர் தமிழரசன் என்பவரிடமிருந்து 82 ஆயிரத்து 775 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அதிகாரிகள் பட்டாசு மற்றும் பணம் லஞ்சம் வாங்குவதாக வந்த லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர் சோதனையில் 130 பட்டாசு பார்சல் மற்றும் அவரது அலுவலக அறையில் கணக்கில் காட்டப்படாத பணம் 29 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். இறுதியில் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் வானதி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-அக்-201912:32:39 IST Report Abuse
தமிழ்வேல் 1.50 லட்ச ரூபாய் தானா ? இவங்க ரெயிடு பண்றதுக்காக போயிட்டு வந்த செலவு இதைவிட தாண்டுமே...
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
23-அக்-201911:45:20 IST Report Abuse
 Sri,India தீபாவளிக்கு மட்டுமா லஞ்சம் வாங்குகிறார்கள் ....போங்க சார் சும்மா காமெடி பண்ணிக்கிட்டு . ஆண்டு தோறும் லஞ்சம் வாங்குவதில் தமிழக அரசு அதிகாரிகளுடன் யாருமே போட்டி போட முடியாது .
Rate this:
Share this comment
Cancel
Ravanan Ramachandran - Chennai,இந்தியா
23-அக்-201911:39:08 IST Report Abuse
Ravanan Ramachandran பெரும்பாலான இந்திய மக்களிடம் லஞ்சம் என்பது ரத்தத்தில் ஊறியது . இதை அந்த கடவுளே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது...திருடன் தானாக பார்த்து திருந்தாவிட்டால் ...லஞ்சம் வாங்குபவர்கள் தாங்களாக திருந்தாவிட்டால் எந்த நடவடிக்கையும் பயன் தராது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X