பொது செய்தி

தமிழ்நாடு

3 வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

சேலம் : மேட்டூர் அணை, கடந்த 3 மாதங்களில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.



latest tamil news



சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த ஆண்டில் 3வது முறையாக அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. வரலாற்றில் கடந்த 86 ஆண்டுகளில் 44வது முறையாக அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதையொட்டி காவிரி டெல்டா மற்றும் மேட்டூர் அணை கால்வாய் பாசன பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது.


latest tamil news



இரண்டு தினங்களுக்கு முன் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் மழை மேலும் தீவிரம் அடைந்து வருவதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் மேட்டூர் அணை ஏற்கனவே இருமுறை நிரம்பிய நிலையில், இன்று 3வது முறையாக நிரம்பி உள்ளது.

அணை முழு கொள்ளளவை எட்டியதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்ட மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியதை அடுத்து, அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 4500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு 27,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணையின் இருந்து 22,500 கனஅடி திறக்கப்பட்டு வரும் நிலையில், 16 கண் மதகு வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-அக்-201911:55:14 IST Report Abuse
 nicolethomson தயவு செய்து கடலுக்கு விடாதீங்க ஒவ்வொரு துளியும் பொக்கிஷம்
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
23-அக்-201911:28:28 IST Report Abuse
Rajan யோவ் சீக்கிரம் காலி பண்ணுங்க, மணல் அல்லனும்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-அக்-201911:07:04 IST Report Abuse
Lion Drsekar எத்தனைமுறை அணையின் நீர்மட்டம் எட்டினாலும் நாங்கள் அந்த நீரை வந்த இடத்துக்கே அனுப்புவதில் கைதேர்ந்தவர்கள், எத்தினை லட்சம் கோடி மக்கள் எதிர்த்தாலும் கவலை இல்லாத ஒரு ஜனநாயக அமைப்பு, ஆதாரத்துடன் ஊடகங்கள் மற்றும் செய்திதாள்களில் பிரசுரித்தாலும் யாரும் கேட்க முடியாத அளவுக்கு சுரேந்திரமாக இயங்கும் அமைப்பு, இயற்கை அன்னை அருள் கூறுது கருணை பொழிந்தாலும், கருணையே இல்லாத நம்மவர்கள் மக்களின் கண்ணீரைப்பார்த்து ரசிப்பதில் வல்லவர்கள், தனக்கும் தெரியாது சொன்னாலும் கேட்கமாட்டார்கள் இதுதான் ஜனநாயகம். வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X