பயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை

Added : அக் 23, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
வாஷிங்டன் : பயங்கரவாதமும், பயங்கரவாதிகளும் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் அரசு தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது மூலம்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையில் ஆக்கப்பூர்மான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான

வாஷிங்டன் : பயங்கரவாதமும், பயங்கரவாதிகளும் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.



latest tamil news



பாகிஸ்தான் அரசு தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது மூலம்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையில் ஆக்கப்பூர்மான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குதல் அவசியம் எனவும் அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய் ஷே முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்களை பாகிஸ்தான் தூண்டி விடுவதும் எல்லைத் தாண்டி தாக்குதல்களை நடத்துவதும்தான் பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாக உள்ளது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


latest tamil news



அண்மையில் நடைபெற்ற ஐநா.சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு முறை அதிபர் டிரம்ப் இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் அமைதியை நிலைநிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு விவகாரக் குழு செய்தித் தொடர்பாளர் ஆலிஸ் ஜி வெலஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் பயங்கரவாத இயக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது மூலம்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையில் ஆக்கப்பூர்மான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகும் என்று சொல்கிறார்கள் சரி பேச்சு வார்த்தை நடத்தி பாகிஸ்தானுக்கு எள்ளளவு பயன் கிடைக்குமா? முந்தைய ஆட்சியிலாவது பேச்சு வார்த்தை நடப்பதாக மற்ற நாடுகளுக்கு நாடகமாடி கடன் வாங்க துளி பயன் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இன்றோ பளிச்சென்று பட்டவர்த்தனமாக கைவிரித்து விட்டார்களே
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
23-அக்-201914:48:03 IST Report Abuse
M.COM.N.K.K. இரட்டை கோபுரம் தகர்ப்பு பெண்டகன் தாக்குதலுக்கு பிறகுதான் அமெரிக்கா இந்தியாமீது நம்பிக்கை வைத்தது தாக்குதலுக்கு முன்புவரை இந்தியாவை அமெரிக்கா நம்பவில்லை.இப்போது அமெரிக்காவிற்கு எல்லாம் புரிந்துவிட்டது.அதுபோதும் எங்களுக்கு.
Rate this:
Cancel
23-அக்-201914:05:35 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பாகிஸ்தான் என்றாலே தீவிரவாதிகள் தான் , தீவிரவாதிகள் என்றால் பாகிஸ்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X