பொது செய்தி

இந்தியா

இனி கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (74)
Advertisement

பெங்களூரு : நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் சேர ஒரே நுழைவுத் தேர்வைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.






பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தேசியக் கொள்கையின் இறுதி வரைவு குறித்து 2 லட்சம் பரிந்துரைகள் ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது. இறுதி வரை விரைவில் தயாராகிவிடும். அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை, முற்றிலும் இந்தியாவை மையமாகக் கொண்ட முற்போக்கான கொள்கையாக இருக்கும். இறுதி வரைவுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்ததும் அதுபற்றி அறிவிக்கப்படும்.





நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர, பாடவாரியாக ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவது குறித்து தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவில் பரிந்துரைக்கப்படும். அதன்படி 300க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் நுழைவுத்தேர்வை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான தேர்வு நடத்தும் பணிகளை தேசிய தேர்வு முகமை நடத்தும். நாடு முழுவதும் உள்ள 40 மத்தியப் பல்கலைக் கழகங்களில் பி.எச்.டி. படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் சிரமத்தை போக்க, ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
25-அக்-201915:25:41 IST Report Abuse
வந்தியதேவன் அப்பத்தான்.... தமிழ்நாட்டுப் பசங்க.... உ.பி.யிலேயோ.. ம.பி.யிலேயோ.. ஆள்மாறாட்டம் பண்ணி தேர்வு எழுத முடியும்... செய்யுங்க... செய்யுங்க.... ஒரு முடிவு பண்ணிட்டீங்க... செய்யுங்க, செய்யுங்க...?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
23-அக்-201920:50:28 IST Report Abuse
தமிழ்வேள் இங்கு பிரச்சினை தேர்வு அல்ல தேர்வு நடத்தப்படும் மொழியே இந்திய நாடு முழுமைக்கும் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே என்றால் அது ஏற்கத்தக்கது மாநிலமொழிகளில் தேர்வு கிடையாது ஆனால் ஹிந்தியில் உண்டு என்பதுதான் உதைக்கிறது ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவனுக்கு தனது தாய்மொழியான இந்தியில் தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்கும்போது அதே மாதிரியான தாய்மொழியில் தேர்வு எழுதும் வாய்ப்பும் இந்தியாவின் அனைத்து மொழி பேசும் மாணவர்களுக்கும் வேண்டும் மாநில மொழிகளில் தேர்வு வைக்க இயலாது என்னும்போது இந்தியில் மட்டும் தேர்வு எதற்கு ? தமிழக கல்லூரிகளில் இந்திக்காரன் சேர்ந்து தமிழ் புலவர் பாடத்திட்டங்களை ஹிந்தியில் நடத்து என்று கேட்பானா? மேலை சிவபுரி கரந்தை திருவாவடுதுறை பேரூர் ஆதீன கல்லூரிகளில் தமிழ் புலவர் பட்ட வகுப்புகளுக்கும் தேர்வு இந்தியில் நடக்குமா?' தொல்காப்பியத்தையும் புறநானூறு மற்றும் சிவஞானபாடியத்தை ஹிந்தி எழுத்துருவில் எழுதி படிப்பார்களா? புரிதலற்ற கேனத்தனமான ஒரு நடவடிக்கை ..தென்னிந்தியா முழுமையிலும் பீடா வாயன்கள் பஸ் டே கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கலாம் [ஆனால் தமிழக மாணவர்களை போல போலீசிடம் அடிவங்கமாட்டார்கள் ஒவ்வொரு பயலும் துப்பாக்கி வைத்திருப்பான் கட்டுப்படுத்த இயலாது -தமிழகம் குட்டி சுவராக போகும் ]
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
23-அக்-201920:23:29 IST Report Abuse
Babu ஒரு வேளை அரசியலுக்கு அதிக அளவில் இளைஞர்களை வரவழைப்பதற்கான திட்டமாக இருக்குமோ? நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகள் இல்லாத அதிககதிக வரும்படி கிடைக்கும் ஒரே துறை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X