பொது செய்தி

இந்தியா

பெண்களுக்கு எதிரான குற்றம்: உ.பி., 'டாப்'

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (30)
Advertisement

புதுடில்லி : 2017 ம் ஆண்டு நிலவரத்தின் படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்திர பிரதேசம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பதிவு அமைப்பு தெரிவித்துள்ளது.





2017 ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலான புள்ளி விபர கணக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவில் உ.பி., முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ம.பி., கேரளா மற்றும் டில்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.





உபி.,யில் 2016 ம் ஆண்டு 2,82,171 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2017 ல் 3,10,084 ஆக அதிகரித்துள்ளது. குற்ற வழக்குகளை பொறுத்தவரை 2016 ல் டில்லி முதலிடத்தில் இருந்துள்ளது. இந்த புள்ளிவிபத்தை வைத்து, காங்., தலைவர் பிரியங்கா உ.பி., அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த சூழல் வெட்கக் கேடானது எனவும், முதல்வர் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். புள்ளிவிபரத்தை சரியாக பார்க்காமல் கருத்து சொல்லி, பிரியங்கா , அகிலேஷ் போன்ற எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அரசியலாக்குகிறார்கள் என பா.ஜ., உடனடியாக பதிலளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivak - Chennai,இந்தியா
24-அக்-201916:43:56 IST Report Abuse
Sivak சுரேஷ் குமார் ... நீங்க ஆண் ... ஆனா ஆண்கள் சரியில்லைன்னு நீங்களே சொல்றீங்க ... சரி ஆண்களை சரியாய் சொல்லி கொடுத்து வளர்க்கணும் சரி ஓகே .. அப்ப பொண்ணுங்களை என்ன சொல்லி வளர்க்கணும் ... இன்றைய சூழலில் தறி கெட்டு அலைவது பெண்கள் தான் .. குழந்தை கணவரை கொலை செய்வது (குன்றத்தூர் அபிராமி), கொள்ளை அடிப்பது ...(தோசையில் தூக்க மாத்திரை செய்தி போன்று பல) ... பெண்கள் அடக்கமா இருந்தாலே பாதி குற்றங்கள் குறையும் ...
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
23-அக்-201915:44:35 IST Report Abuse
தமிழர்நீதி ( பிடிக்கலைனா பாகிஸ்தான் போ ).
Rate this:
Share this comment
Cancel
23-அக்-201914:15:50 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் 20 கோடி க்கு மேல் மக்கள் தொகை உள்ள மாநிலத்தை , ஒரு கோடி மக்கள் உள்ள மாநிலங்களோடு ஒப்பிட்டு , குற்ற எண்ணிக்கையை சொன்னால் எப்படி சரியாகும். ஒரு கோடி மக்களுக்கு எத்தனை குற்ற செயல்கள் நடக்கிறது என்று வகுத்து சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X