பெண்களுக்கு எதிரான குற்றம்: உ.பி., டாப்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெண்களுக்கு எதிரான குற்றம்: உ.பி., 'டாப்'

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (30)

புதுடில்லி : 2017 ம் ஆண்டு நிலவரத்தின் படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்திர பிரதேசம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பதிவு அமைப்பு தெரிவித்துள்ளது.





2017 ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலான புள்ளி விபர கணக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவில் உ.பி., முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ம.பி., கேரளா மற்றும் டில்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.





உபி.,யில் 2016 ம் ஆண்டு 2,82,171 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2017 ல் 3,10,084 ஆக அதிகரித்துள்ளது. குற்ற வழக்குகளை பொறுத்தவரை 2016 ல் டில்லி முதலிடத்தில் இருந்துள்ளது. இந்த புள்ளிவிபத்தை வைத்து, காங்., தலைவர் பிரியங்கா உ.பி., அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த சூழல் வெட்கக் கேடானது எனவும், முதல்வர் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். புள்ளிவிபரத்தை சரியாக பார்க்காமல் கருத்து சொல்லி, பிரியங்கா , அகிலேஷ் போன்ற எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அரசியலாக்குகிறார்கள் என பா.ஜ., உடனடியாக பதிலளித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X