அரியானாவில் தொங்கு சட்டசபை: இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (27)
Advertisement

புதுடில்லி: அரியானாவில் தொங்கு சட்டசபையே அமையும் என இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்த கருத்து கணிப்பு முடிவுகளின்படி, 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ.,வுக்கும், காங்.,க்கும் கடும் போட்டி நிலவும். பா.ஜ.,வுக்கு 32 முதல் 44 இடங்களும், காங்.,க்கு 30 முதல் 42 இடங்களும் கிடைக்கும். இதற்கு முன் 2014 சட்டசபை தேர்தலில் பா.ஜ., 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்., வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.




அரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.,வே வெற்றி பெறும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் கூறி உள்ளன. இந்நிலையில் இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தொங்கு சட்டசபை அமையவே அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறது. ஒருவேளை அக்.,24 வெளியிடப்படும் தேர்தல் முடிவுகளில் இந்தியா டுடே கருத்துகணிப்பு உண்மையாகும் பட்சத்தில், அது காங் மற்றும் பா.ஜ.,விற்கு பெரிய சவாலை ஏற்படுத்தும்.

மேலும் இந்தியா டுடே கருத்து கணிப்பில், அரியானாவில் தக்ஷியந்த் சவுதாலாவின் ஜெ.ஜெ.பி., கட்சி 6 முதல் 10 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளும் 6 முதல் 10 இடங்களை கைப்பற்றும் என கூறப்படுகிறது. ஓட்டு சதவீத அடிப்படையில் பார்த்தால் பா.ஜ.,வுக்கு 33 சதவீத ஓட்டுக்களும், காங்.,க்கு 32 சதவீத ஓட்டுக்களும், ஜெ.ஜெ.பி., கட்சிக்கு 14 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு உதிரி கட்சிகளின் மதிப்பு கூடும் எனவும், இவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை பொறுத்தே அரியானாவில் புதிய ஆட்சி அமையும் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
23-அக்-201918:07:40 IST Report Abuse
Mayavan Mayavan யாரும் தொங்க வேண்டாம். அமைதியா உக்காந்து பிஜேபி ஆட்சியை வேடிக்கை பாருங்கோ.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
23-அக்-201916:57:59 IST Report Abuse
ஜெயந்தன் தொங்கட்டும்...தொங்கட்டும்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-அக்-201916:00:09 IST Report Abuse
Endrum Indian பஞ்சாப் ஹரியானா பக்கத்து பக்கத்திலே தானே இருக்கு அப்போ அங்கேயும் முஸ்லீம் நேரு காங்கிரஸ்ஸ்ஸ் தான் வரும் இதில் சந்தேகமேயில்லை. அப்படி தொங்கு சபை ஆகும் பட்சத்தில் இருக்கவே இருக்கு "குமார சம்பவம்" கர்நாடக வழி???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X