பொது செய்தி

இந்தியா

அணிசேரா நாடுகள் மாநாடு: மோடி மீண்டும் புறக்கணிப்பு

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (11)
Advertisement

புதுடில்லி : அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளாமல், இந்த ஆண்டும் பிரதமர் மோடி மீண்டும் புறக்கணிக்க உள்ளார். கொள்கை மாறுபாடு காரணமாக மோடி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


இந்த ஆண்டு, 18வது அணி சேரா நாடுகளின் மாநாடு வரும் அக்.,25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அசர்பைஜானில் நடக்கிறது. இந்த மாநாட்டில் இம்முறை இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு கலந்து கொள்வார் என இந்திய அரசு அறிவித்துள்ளது. 2வது முறையாக தற்போதும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளாமல் மோடி தவிர்த்துள்ளார். அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கும் 2வது இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1979 ல் இந்திய பிரதமராக இருந்த சரண் சிங், இந்த மாநாட்டை தவிர்த்தார். இதற்கு முன் 2016ல் வெனின்சுலாவில் நடந்த அணிசேரா நாடுகளின் பட்டியலிலும் கலந்து கொள்ளாமல் மோடி தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை அணிசேரா நாடுகள் மாநாட்டில் இந்தியா சார்பில் அப்போதைய துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீத் அன்சாரி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக உள்ளதே மோடி இந்த மாநாட்டை தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதே சமயம் இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் வங்கதேச பிரதமர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அணி சேரா நாடுகள் இந்தியாவின் பயங்கரவாதம், ஐநா பாதுகாப்பு கவுன்சில் மாற்றி அமைப்பு போன்ற முக்கிய பிரச்னைகளில் மிக குறைந்த அளவே ஆதரவு அளித்துள்ளதாக மோடி நினைப்பதும், அவர் இந்த மாநாட்டை தவிர்ப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-அக்-201917:16:35 IST Report Abuse
ஆப்பு கொள்கை பிடிக்கலேன்னா யாரையுமே அனுப்பக்கூடாது. நாம்தான் எல்லா அணியிலும் இருக்கோமே... ரஷ்ய அணி, அமெரிக்க அணி, ஃப்ரஞ்சு அணி, சீன அணின்னு...
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
23-அக்-201915:59:10 IST Report Abuse
Subburamu Krishnaswamy No country is a true member of non aligned movement. Every country is a relationship with a group of countries. We have military and economic trade agreements with several countries aligned in groups. There is no true non aligned movement at all in the world. .
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
23-அக்-201915:51:18 IST Report Abuse
murali வெங்காயம் இல்லாமல் ஐயர்ங்க கூட சாப்பிடறது இல்லை தெரியுமாடா அம்பி அண்ணாந்து.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X