பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (3)
Advertisement
Weather, Rain, மழை, வானிலை, சென்னை, டெல்டா மாவட்டங்கள்

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வடக்கு நோக்கி ஆந்திர கடல் பகுதிக்கு சென்றது. தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். இதுவரையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 3 மி.மீ., அதிகமாக 130 மி.மீ., மழைப்பதிவாகியுள்ளது.




அடுத்த 2 நாட்களில் மழையின் அளவு சற்று குறையும். சென்னையை பொறுத்தவரையில் ஓரளவு மழை பெய்யும். ஆந்திர கடல், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 9செ.மீ., குப்பனாம்பட்டி 7செ.மீ., முண்டியம்பாக்கம் 6செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Doha,கத்தார்
23-அக்-201919:47:45 IST Report Abuse
Ravi பாலச்சநதிரனை வேறு துறைக்கு மாற்றினால் தமிழகத்துக்கு நல்ல மழை கிடைக்கும். ராசியில்லாத வாய்
Rate this:
Share this comment
Cancel
prasath - coimbatore,இந்தியா
23-அக்-201915:54:29 IST Report Abuse
prasath சொல்லிட்டாங்க இனி மழை பெய்யாது.சொன்னதுக்கு அப்பறம் தான் மழை பெய்வதில்லை.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
23-அக்-201913:18:44 IST Report Abuse
K.Sugavanam மஞ்சள்ஆரஞ்சு,சிவப்பு ஆந்திரம் நோக்கி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X