டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (3)
Weather, Rain, மழை, வானிலை, சென்னை, டெல்டா மாவட்டங்கள்

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வடக்கு நோக்கி ஆந்திர கடல் பகுதிக்கு சென்றது. தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். இதுவரையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 3 மி.மீ., அதிகமாக 130 மி.மீ., மழைப்பதிவாகியுள்ளது.




அடுத்த 2 நாட்களில் மழையின் அளவு சற்று குறையும். சென்னையை பொறுத்தவரையில் ஓரளவு மழை பெய்யும். ஆந்திர கடல், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 9செ.மீ., குப்பனாம்பட்டி 7செ.மீ., முண்டியம்பாக்கம் 6செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X