"நாங்க இருக்கோம்": சிவக்குமாருக்கு சோனியா ஆறுதல்

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (33+ 27)
Advertisement

புதுடில்லி : கட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும். விரைவில் போராடி இதில் இருந்து வெளியே வருவோம் என டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்த, காங்., இடைக்கால தலைவர் சோனியா ஆறுதல் கூறி உள்ளார். இதன் இடையே, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், சிவக்குமாருக்கு டில்லி ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது.





வருமான வரித்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் செப்., மாதம் சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பண மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், 23 வயதாகும் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2013 ல் ரூ.1 கோடியாக இருந்த ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு 2018 ல் ரூ.100 கோடிக்கும் மேலாக அதிகரித்தது எப்படி என விசாரணை நடைபெற்று வருகிறது.


ஜாமின்


இதற்கிடையில் சிவக்குமாருக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. அவர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்துள்ள கோர்ட், ஆவணங்கள் விசாரணை ஆணையங்களிடம் உள்ளதால், அதனை சிவக்குமார் சிதைக்க முடியாது. சாட்சிகளை கலைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.







சோனியா சந்திப்பு


இந்நிலையில் இன்று(அக்., 23) காலை காங்., தலைவர் சோனியா, அம்பிகா சோனியுடன் திகார் சிறைக்கு சென்று சந்தித்தார். அப்போது சிவக்கமாரிடம் சோனியா, கட்சி உங்களுடன் உள்ளது. உங்களுக்கு ஆதரவாக நிற்கும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த போடப்பட்டுள்ளது. மற்ற காங்., தலைவர்களையும் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு குறிவைத்துள்ளது. அவர்களுடன் நாங்கள் மோதி, இதிலிருந்து வெளியே வருவோம் என ஆறுதல் கூறி உள்ளார். சமீபத்தில் சிவக்குமாரை கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் சந்தித்து ஆறுதல் கூறி விட்டு வந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (33+ 27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
24-அக்-201900:58:07 IST Report Abuse
orange mittai கூட்டு களவாணித்தனம் பண்ணுனா இதான் பிரச்சனை ...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-அக்-201919:51:45 IST Report Abuse
Nallavan Nallavan கட்சித் தலைமையிடத்தையே சிறைச்சாலைக்கு மாத்தணும் ..... அம்மணியும் வந்துட்டா அதைச் செஞ்சிரலாம் ......
Rate this:
Share this comment
Cancel
Young Prince - Bangalore,இந்தியா
23-அக்-201918:47:09 IST Report Abuse
Young Prince நீங்க இருப்பீங்க ஆனா அவரு இருப்பாரா??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X