சித்தராமைய்யாவை சுற்றிவளைத்த கிராமத்தினர்

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (6)
Advertisement

பெங்களூரு : வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யாவின் காரை வழி மறித்து, சுற்றி வளைத்த கிராமத்தினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.






கர்நாடகாவில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் சாலைகள் கடும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக தமிழக - கர்நாடக எல்லை பகுதியான மாலே மகதீஸ்வரா மலைப் பகுதியில் மண்அரிப்பு காரணமாக சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை சித்தராமைய்யா இன்று பார்வையிட்டார்.





அப்போது பதாமிக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் சித்தராமைய்யா சென்ற காரை பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் வழி மறித்தனர். காரை சுற்றி வளைத்த அவர்களில் சில வயதான பெண்கள், சித்தராமைய்யா அருகே சென்று, "நாங்கள் உங்களுக்கு ஓட்டளித்தால் எங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என உங்களிடம் கேட்டோம். நீங்களும் கட்டித் தருவதாக வாக்களித்தீர்கள். தற்போது நீங்கள் எங்களின் ஓட்டுக்களை பெற்றுக் கொண்டீர்கள். ஆனால் எங்களுக்கு வீடு கிடைக்கவில்லை. எங்களுக்கு யார் கட்டித் தருவார்கள்?" என கேள்வி எழுப்பினர்.
இதற்கு மழுப்பலாக பதிலளித்ததுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட சித்தராமைய்யா, போலீசாரை வைத்து கிராம மக்களை அப்புறப்படுத்தி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24-அக்-201901:18:16 IST Report Abuse
 nicolethomson இவரின் அடிப்பொடிகள் தான் அங்கே எல்லா கான்டராக்டுகளையும் அள்ளியது ,
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
23-அக்-201916:31:31 IST Report Abuse
வல்வில் ஓரி தக்காளியை நசுக்கி விடுங்க...
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
23-அக்-201916:18:12 IST Report Abuse
Nathan சித்திக் ரஹமதையாவா, திப்பு குட்டப்பாக்கு ஜே சொல்லிட்டு போயிருவாரே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X