பொது செய்தி

இந்தியா

ஊழலுக்கு இடமில்லை : பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி உறுதி

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (9)
Advertisement
BCCI, Ganguly, Dhoni, Kohli, பிசிசிஐ, இந்திய கிரிக்கெட் வாரியம், தலைவர், கங்குலி, தோனி, கோஹ்லி

மும்பை: ''பி.சி.சி.ஐ.,யில் ஊழலுக்கு இடமில்லை, நம்பகத்தன்மையில் சமரசம் கிடையாது,'' என தலைவர் கங்குலி தெரிவித்தார்.

ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் வெடித்த சூதாட்ட சர்ச்சை காரணமாக இந்திய கிரிக்கெட் போர்டை (பி.சி.சி.ஐ.,) நிர்வகிக்க வினோத் ராய் தலைமையில் கிரிக்கெட் நிர்வாகக்குழு (சி.ஒ.ஏ.,) அமைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள மாநில கிரிக்கெட் சங்கங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. புதிய விதிகளின் படி நடந்த தேர்தலில் பி.சி.சி.ஐ., தலைவராக, இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று (அக்.,23) ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பி.சி.சி.ஐ.,யின் 39வது தலைவராக கங்குலி முறைப்படி பதவி ஏற்றார். இதையடுத்து 33 மாதங்களாக நீடித்து வந்த சி.ஒ.ஏ.,யின் கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது.




பின் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி கூறியதாவது: இந்திய கிரிக்கெட் போர்டில் அனைவரும் சமம் தான். இதன் நம்பகத்தன்மையில் சமரசம் கிடையாது. ஊழலுக்கு இடமில்லை. இந்திய அணியை வழிநடத்தியது போல, பி.சி.சி.ஐ.,யை சிறப்பாக நிர்வகிப்பேன். அனைவருக்கும் பரஸ்பரம் மரியாதை அளிக்கப்படும். தோனியின் எதிர்காலம் குறித்து இதுவரை அவரிடம் பேசவில்லை. சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற்று விட மாட்டார்கள். இந்திய அணியை வித்தியாசமான வழியில் கொண்டு செல்லும் விராத் கோஹ்லிக்கு ஆதரவாக இருப்பேன். இவ்வாறு கங்குலி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kurinjikilan - Madurai,இந்தியா
23-அக்-201920:35:13 IST Report Abuse
kurinjikilan Anaal azhagiya pengal sudharippaaga irukkonum..
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
23-அக்-201919:50:48 IST Report Abuse
PANDA PANDI HM மின் திட்டம் வேலை செய்கிறது. பாவம் வேற வேலை கங்குவிற்கு இல்லை. சாக்கடையில் குதித்துவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Desikan - chennai,இந்தியா
23-அக்-201919:18:08 IST Report Abuse
Srinivasan Desikan கங்குலி கருத்தி​ன்படி பார்த்தால் இனி ஊழல் இல்​லை இதற்கு முன்பு இருந்தது என்று ஒப்புதல் அளிக்கிறாரா
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
24-அக்-201900:00:29 IST Report Abuse
VELAN Sகங்குலி , நீங்கள் பதவிக்கு வந்ததே ஒரு ஊழல்தான் , ஊழல் மீது ஏறி பதவிக்கு வந்த கங்கூலியே , நீங்கள் எவ்வாறு ஊழலை ஒழிக்க முடியும் .அமித்ஷா மகன் எங்கே கையெழுத்து போட சொல்றாரோ அங்கே நீங்கள் கையெழுத்து போட்டாக வேண்டும் , இது ஒன்றே போதும் , ஊழல் தலை விரித்து ஆடுவதற்கு . நல்லா வந்துட்டாய்ங்க பேசுறதுக்கு , இந்திய மக்கள் முட்டாளாக இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X