பிஷப் சித்திரவதை: கன்னியாஸ்திரி புகார்

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (51)
Advertisement

கோட்டயம்: கேரளாவில், பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி லுாசி, தான் சித்ரவதை செய்யப்படுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ என்பவர், தனக்கு கீழ் பணியாற்றிய கேரள கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், கடந்த ஆண்டு சிக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லுாசி என்ற கன்னியாஸ்திரி, மேலும் சில கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.
ரோமன் கத்தோலிக்க தேவாலாயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், எப்.சி.சி., எனப்படும், 'பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட்' சபையிலிருந்து, கன்னியாஸ்திரி லுாசி நீக்கப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து லுாசி, வாடிகனில் புகார் கூறியிருந்தார்.
மேலும், லுாசி, தான் தங்கியிருந்த கான்வென்டில் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டதாகவும், போலீசார் வந்து கதவை திறந்து விட வேண்டியிருந்ததாகவும், கேரள மாநிலம், வெல்லமுண்டா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த புகார் அளித்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி லுாசிக்கு, எப்.சி.சி., 'நோட்டீஸ்' அனுப்பியது. புகார் அளித்ததற்காக மன்னிப்பு கேட்கும்படியும் அந்த நோட்டீசில் கூறப்பட்டது.
இந்நிலையில் பிஷப்புக்கு எதிராக லூசி, மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டதாவது: பாலியல் புகார் அளிக்கப்பட்டதில் இருந்து நான் பலவிதமான அவமானங்களுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளானேன். தேவாலய அதிகாரிகள் எனக்கும் எனது துணை கன்னியாஸ்திரிகளுக்கும் எதிராக தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். பிஷப் பிராங்கோவும் அவரது குழுவும் இதற்கு பின்னால் இருக்கிறார்கள் என நினைக்கிறோம். இதனால் பலவிதங்களில் சித்ரவதை அனுபவித்து வருகிறோம். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
25-அக்-201915:38:38 IST Report Abuse
Jayvee கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கழகம் எங்கே..
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
28-அக்-201916:17:24 IST Report Abuse
Ram Sekarஉண்டியல் கட்சிகள், திராவிட கட்சிகள், குருமா, ஓசிசோறு, ஆமை கறி கட்கி இதுக்கா எல்லாம் வாயையே தொறக்கமாட்டானுங்க. இந்து சமயத்தில் இப்படி நடந்துருச்சுனா உடனே கெளம்பிருவானுங்க....
Rate this:
Share this comment
Cancel
rishi - varanasi,இந்தியா
24-அக்-201916:54:49 IST Report Abuse
rishi எல்லாம் அந்த ஈசனின் திருவிளையாடல்...
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
24-அக்-201914:08:13 IST Report Abuse
pattikkaattaan இவிங்க ரெண்டு பேரையும் குற்றவாளி கூண்டில் ஏற்றி நிற்கவைத்து துருவி துருவி விசாரித்து , யார் குற்றவாளியோ அவருக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும் ... தாமதப்படுத்துவதால் கிருத்துவ மதத்திற்குத்தான் கெட்ட பெயர் .. அந்த ஆள்கிட்ட இருந்து முதலில் அந்த தொப்பியையும், கையில் வைத்துள்ள கோலையும் பிடுங்கவேண்டும் .. ஒழுங்கா இருக்கமுடியவில்லையென்றால் , போட்டிருக்கிற வெள்ளை உடையை கழட்டிவிட்டு வெளியே வந்து சராசரி மனிதனா வாழ்க்கை நடத்தணும் .. கருமங்கள் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X