பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (18)
Advertisement
தமிழ்நாடு, தமிழகம், மருத்துவ கல்லூரிகள், மத்திய அரசு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், ராமநாதபுரம், ராம்நாட், தினமலர்,  dinamalar, ramnad, ramanadhapuram, medical colleges, tamil nadu, tamilagam, virudhunagar, namakkal, neelagiri, Nilgiris, thiruppur, dindigul,

புதுடில்லி: தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழகத்தில், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகள் தலா ரூ.395 கோடியில் அமைய உள்ளன. இதற்கு, மத்திய அரசு தலா ரூ.195 கோடியும், மாநில அரசு தலா ரூ.130 கோடியும் வழங்க உள்ளன. இதன்மூலம் 900 எம்.பி.பி.எஸ்., சீட்கள் கிடைக்கும் எனவும், அதில் 85 சதவீதம் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீதம் வெளி மாநில மாணவர்களுக்கும் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தற்போது மொத்தம் 23 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. புது மருத்துவ கல்லூரிகளுக்காக நிலம் கையகபடுத்துதல், தேவையான டாக்டர்கள், நர்சுகள் நியமித்தல் போன்ற பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த கல்லூரிகள் திறக்கப்படும் போது, அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150 ஆக உயர வாய்ப்பு உள்ளது.
முதல்வர் நன்றி
தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவ கல்லுாரிகள் துவங்க மத்திய அரசு அனுமதி அளித்ததை யடுத்து, முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
24-அக்-201907:02:45 IST Report Abuse
elakkumanan . நாட்டில் 15000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில்தான் தற்போதைய விகிதம் உள்ளது. 900 பேருக்கு ஒரு மருத்துவர் என்பது மிக உயர்ந்த நிலை. குறைந்தபட்சம் ஒரு 2500 பேருக்கு ஒரு மருத்துவார்னு வரணும்னா, இன்னும் 30 வருடங்கள் பிடிக்கும். இதுக்கு மத்தியில், மக்கள் தொகை வளர்ச்சியும் கவனிக்கவேண்டும் . ஒரு வருஷம் எத்தனை ஆயிரம் திறமையானவர்கள் வெளிநாடுகளுக்கு பொய் படிக்கிறார்கள் என்பது தெரியுமா? எவ்வளவு அந்நிய செலவாணி நமக்கு இழப்புன்னு தெரியுமா?எவ்வளவு திறமை வெளிய போகுதுன்னு தெரியுமா? இதெல்லாமே தெரியாமல், மோடி மேலயும், அதிமுக மேலயும் உள்ள கோவத்துலயும், உண்மையா வரி கட்ட வேண்டிய வயித்தெரிச்சலிலும், சும்மா பொகையாதீர்கள்.., மோடி ஒழிகன்னு சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், திருட்டு கட்சியோட காசுக்கு, திருட்டு கட்சியோட தப்புக்கு... மோடி ஒழிக போடவேண்டாம். பழைய கல்வி பெருமைகள் எல்லாமே காமராஜரை சேரும்.. இந்த செத்துப்போன காண் கிராஸ் காமராஜரின் புகழை கிளைம் பண்ணுவதே இல்லை. இத்தாலிக்கு வாலியை தூக்கிகிட்டு போகவே அவனுகளுக்கு நேரம் போதலை. இந்த கேப்புல, அவரோட பெருமையை தீய முக ஆடையை போட்டுட்டாங்க. ஊரில் உள்ள, ஒவொரு பெரிய , கல்வி, மருத்துவ , நிலையங்களை சென்று பார்க்கவும்.. திறப்பு .............காமராஜரால்...... சும்மா காசுக்கு மோடி ஒழிக போடுறது .................. அவ்வளவே,.... விநாச காலே விபரீத புத்தி...................................... நலம் உண்டாகட்டும். நாடு நலம் பெறட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-அக்-201906:14:27 IST Report Abuse
Mani . V "தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்". ஆனால் கண்டிப்பாக சேர்க்கை நீட் தேர்வில் நூற்றுக்கு, 967 மார்க் எடுக்கும் வட மாநிலத்தவருக்கு மட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-201905:52:47 IST Report Abuse
Ivan Dumilans ku korai thaan solla theriyum.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X