பொது செய்தி

இந்தியா

தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர்

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (9)
Advertisement
Anand Mahindra, Mysuru man,mom,  India tour, scooter, dinamalar, ஆனந்த் மஹிந்திரா, தாய், கார், தொழிலதிபர், தட்சிணா மூர்த்தி கிருஷ்ணகுமார், புனித தலங்கள், தினமலர்,

புதுடில்லி: வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தன் வயதான தாயாரை, கோவில்களுக்கு புனித யாத்திரை அழைத்து சென்ற, தட்சிணாமூர்த்தி கிருஷ்ணகுமார் என்பவருக்கு, புதிய கார் ஒன்றை பரிசளிக்க விரும்புவதாக, மஹிந்திரா நிறுவன அதிபர், ஆனந்த் மஹிந்திரா முன்வந்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், மைசூருவை சேர்ந்தவர், தட்சிணாமூர்த்தி கிருஷ்ணகுமார். இவர், வங்கியில் பணியாற்றி வந்தார். இவரது தாயாருக்கு, 70 வயதுக்கு மேலாகிறது. நாட்டில் உள்ள பல்வேறு புனித தலங்களுக்கும் செல்ல வேண்டும் என்பது, இவரது தாயாரின் நீண்ட நாள் ஆசை. அதை நிறைவேற்றி வைக்க, கிருஷ்ணகுமார் முடிவு செய்தார். இதையடுத்து, தனது வங்கி வேலையை ராஜினாமா செய்தார். தன், இரு சக்கர வாகனத்தில், தாயாரை அழைத்துக் கொண்டு, புனித யாத்திரை புறப்பட்டார். கர்நாடகா, கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு புனித தலங்களுக்கும், அவரை அழைத்து சென்றார்.

இவர்கள் இருவரும், இரு சக்கர வாகனத்தில், 25 ஆயிரம் கி.மீ., பயணம் செய்துள்ளனர். கிருஷ்ணகுமார் மற்றும் அவரது தாயார் பயணம் செய்யும், 'வீடியோ' காட்சிகள், 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக, பத்திரிகைகளிலும், செய்தி வெளியானது.

இதை, மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா பார்த்தார். வயதான தாயாருக்காக, கிருஷ்ணகுமார் எடுத்த முடிவு, நெகிழச் செய்தது.

இதையடுத்து, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளதாவது:தட்சிணா மூர்த்தி கிருஷ்ணகுமாருக்கு, மஹிந்திர நிறுவன தயாரிப்பான, கே.யூ.வி., 100 என்.எக்ஸ்.டி., காரை, பரிசளிக்க விரும்புகிறேன். அடுத்தமுறை புனித யாத்திரை செல்லும்போது, அவரது தாயாரை, அந்த காரில், அவர் அழைத்து செல்லலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், ஆனந்த் மஹிந்திராவின் உதவிக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும், பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh M - COIMBATORE,இந்தியா
26-அக்-201911:38:29 IST Report Abuse
Ramesh M சந்தோசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். என் நாடு என் மக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
25-அக்-201915:35:27 IST Report Abuse
Jayvee அணில் அம்பானி ஏன் அழித்தார் தெரியுமா .. அடுத்தவரை பணத்தை ஆட்டை போட்டதால்..
Rate this:
Share this comment
Cancel
Thulasiraman Ramanujam - vellore,இந்தியா
24-அக்-201916:29:17 IST Report Abuse
Thulasiraman Ramanujam very rare to find such a good heart among Indian billionaires
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X