அரசியல் செய்தி

தமிழ்நாடு

'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி

Updated : அக் 24, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (43)
Share
Advertisement
 'முரசொலி', இடம், விவகாரம் , ஸ்டாலின் ,கேள்வி

சென்னை,:'தி.மு.க., கட்சி பத்திரிகையான, 'முரசொலி' அலுவலகம் அமைந்து உள்ள இடம், பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முன்வருவாரா' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னையில், முரசொலி நாளிதழ் அலுவலகம் உள்ள இடம், பஞ்சமி நிலம் என்பதற்கு, எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல், விவகாரத்தை திசை திருப்ப முயன்று, 'மூலப்பத்திரத்தை வெளியிடவில்லை; பட்டாவை மட்டும் வெளியிட்டுள்ளனர்' என, ராமதாஸ் அறிக்கை விட்டுள்ளார். நான் விடுத்த சவாலுக்கு பதில் சொல்லாமல், வாய் மூடி மவுனமாக உள்ளார்.

இப்போது, ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பா.ஜ., மாநிலச் செயலர் சீனிவாசன், 'இது குறித்து விசாரிக்க வேண்டும்' என, மனு அளித்து உள்ளதாக கூறியுள்ளார். ராமதாஸ் கூற்றை நம்பி, மண் குதிரையில் ஏறி, ஆற்றில் இறங்கியுள்ளார் சீனிவாசன்.

ஆதிதிராவிடர் தேசிய ஆணையத்திற்கு சென்று, நேரத்தை வீணடிப்பதை விட, காஞ்சிபுரம் மாவட்டம், பையனுாரில் பங்களா கட்ட, கையகப் படுத்தியதாக கூறப்படும், பஞ்சமி நிலத்தை மீட்கும் முயற்சியில், ராமதாசுடன் இணைந்து செயல்பட்டால், ஏதாவது பலன் கிடைக்கும்.

முரசொலி அலுவலகம் இருக்குமிடம், பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க, ராமதாஸ் முன் வருவாரா; அவரது கைப்பாவையாக செயல்படும் சீனிவாசன், ராமதாசை வலியுறுத்த முன் வருவாரா? இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani -  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-201921:27:08 IST Report Abuse
Mani DMK means land grabbing. Most of Chennaiates know this. If came to power again, land lords should have to sell theirs, if they ask. So beware of DMK
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
24-அக்-201918:42:16 IST Report Abuse
தமிழ் மைந்தன் அட பச்சையப்பா பல ஆயிரம் பத்திரங்கள்?.......ஒன்று கூட உழைத்து சம்பாதித்த காசில் வாங்கவில்லையா?.....இதில் மிரட்டி வாங்கியது எத்தனை? புடிங்கி கொண்டு பின்னர் எழுதி வாங்கியது எத்தனை? பஞ்சமி நிலத்தில் எத்தனை? புறம்போக்கு நில பத்திரம் எத்தனை? அரசு நிலத்தில் குறைந்த குத்தகை என எடுத்து பெயர் மாற்றம் செய்வதை எத்தனை?....இவை அனைத்தையும் டாக்டர்கள் கேட்க வேண்டும்.................
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
24-அக்-201918:28:01 IST Report Abuse
oce பஞ்சமி நிலங்கள் கேட்பாரற்ற பொறம் (புறம்) போக்கிடங்கள் சாலை ஓரங்கள் ஏரிக் கரைகள் ஏரி எதுவாய்கள் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சம்பாதித்த பணத்தில் இந்தியாவில் நிலங்களையும் மனைகளையும் வாங்கி வைத்து பின்னால் அதை கவனிக்காமல் கை விட்ட சொத்துக்கள் என அனைத்தையும் தேடிப்பிடித்து போலி பத்திரங்களில் கபளீகரம் செய்வதற்கு பகுத்தறிவு பயன்படுகிறது. ஆட்சியை பிடிப்பதும் அதற்காகத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X