மஹாராஷ்டிராவில் பாஜ., ஆட்சி அமைக்கிறது : ஹரியானாவில் இழுபறி நிலை: விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக வெற்றி

Updated : அக் 24, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (18)
Advertisement
விக்கிரவாண்டி, நாங்குநேரி, தேர்தல் முடிவுகள்,நுாலிழை

தமிழகத்தில், இடைத்தேர்தல் நடந்துள்ள, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. புதுச்சேரி, காமராஜ் நகர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது.மஹாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைய உள்ளது. ஹரியானாவில் தொங்கு சட்டசபை அமைகிறது. இதனால், அங்கு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இடைத்தேர்தல் நடந்தது. அங்கு, அந்தந்த மாநில ஆளுங்கட்சி வெற்றி பெற்றன.

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களின் சட்டசபை பொதுத்தேர்தலுடன், நாடு முழுவதும், 17 மாநிலங்களில், 51 சட்டசபை தொகுதிகளுக்கும், இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கும், அக்., 21ல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.


இடைத்தேர்தல்



தமிழகத்தில், காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் சட்டசபை தொகுதிக்கும் அதேநாளில், இடைத்தேர்தல் நடந்தது. விக்கிரவாண்டி தொகுதியில், 93 ஆயிரத்து, 633 ஆண்கள்; 95 ஆயிரத்து, 22 பெண்கள்; நான்கு திருநங்கையர் என, மொத்தம், 1.88 லட்சம் பேர் ஓட்டு போட்டனர்; மொத்தம், 84.81 சதவீத ஓட்டுகள் பதிவாகின. நாங்குநேரி சட்டசபை தொகுதியில், 80 ஆயிரத்து, 500 ஆண்கள்; 90 ஆயிரத்து, 122 பெண்கள்; இரண்டு திருநங்கையர் என, மொத்தம், 1.70 லட்சம் பேர் ஓட்டளித்து உள்ளனர்; 66.35 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதியில், 69.44 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மூன்று தொகுதி களிலும் பதிவான ஓட்டுகள், ஓட்டு எண்ணும் மையங்களில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை, 8:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:ஓட்டு எண்ணும் மையத்தில், நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி, மத்திய ரிசர்வ் போலீசார், பாதுகாப்பு பணியில் உள்ளனர்.


ஓட்டு எண்ணிக்கை



காலை, 8:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்கும். முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப் படும்.அதைத் தொடர்ந்து, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை முழுமையாக, வீடியோவில் பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கை துவங்கிய, சிறிது நேரத்தில், முடிவுகள் வெளிவரும். ஓட்டுகளை எண்ணி முடிந்ததும், ஒவ்வொரு தொகுதியிலும், தலா, ஐந்து ஓட்டுச்சாவடிகளில், அச்சான வேட்பாளர்களின் சின்னங்கள் தனியே எண்ணப்பட்டு, சரிபார்க்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


லெக்டர்களுடன் சாஹு ஆய்வு



தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நேற்று மாலை, 4:00 மணிக்கு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் குறித்து, ஆய்வு செய்தார். இப்பணியை அதிகரிக்க, தேவையான நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.மாலை, 5:30 மணிக்கு, விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்களுடன், இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்தார்.


தி.மு.க., - அ.தி.மு.க., ஆர்வம் காட்டுவது ஏன்?



விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தேர்தல் முடிவுகள், ஆட்சியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இத்தொகுதிகளின் முடிவுகள், உள்ளாட்சி தேர்தலை உறுதி செய்யும் என்பதால், தேர்தல் முடிவை, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் ஆவலுடன் எதிர்பார்த்தனர். லோக்சபா தேர்தலில், தி.மு.க., மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின் நடந்த, வேலுார் லோக்சபா தேர்தலில், நுாலிழையில் வெற்றியை ருசித்தது.
ஆனால், விக்கிரவாண்டியில் திமுக தோல்வியை சந்தித்தது. அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் சுமார் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாங்குநேரியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாராயணனும் வெற்றி முகத்தில் உள்ளார்.
மஹாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. ஹரியானாவில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்,அங்கு ஆட்சி அமைக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில், அம்மாநில ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
24-அக்-201912:59:37 IST Report Abuse
வல்வில் ஓரி வெச்சாம்பாரு ...,.
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
24-அக்-201913:31:19 IST Report Abuse
வல்வில் ஓரி சுடலைக்கு ஆப்பு.....
Rate this:
Share this comment
vidhuran - chennai,இந்தியா
24-அக்-201914:30:27 IST Report Abuse
vidhuranஸ்டாலினுக்கு ஆப்பு என்றெல்லாம் illai இடை தேர்தலில் இருவரும் சமமான நிலையில் போட்டியிட்டது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது சீமான் சொல்வது போல இரண்டு பேருமே பணம் கொடுத்து வாக்கு கெட்டவர்கள் தானே...
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
24-அக்-201914:35:51 IST Report Abuse
வல்வில் ஓரி வாயிலேயே சூடு வெச்சிட்டானுங்க...இந்த நாக்கு தானே ..சிறுபான்மை கல்யாணத்துல போயி இந்துக்கல்யாணத்தை கேவலப்படுத்தினதுன்னு.... ஹா ஹா.....
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
24-அக்-201911:17:46 IST Report Abuse
Balaji இதில் வெற்றிபெற்றால் உள்ளாட்சித்தேர்தல் விரைவில் நடத்த ஏற்பாடுகளை ஆளும் கட்சி செய்யும் என்று தோன்றுகிறது... இல்லையென்றால் மீண்டும் இழுத்தடிப்புகள் நடைபெறும்..
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
24-அக்-201908:00:04 IST Report Abuse
s.maria alphonse pandian மூன்றாமவர் யாராவது வென்றால்தான் ஜனநாயகம்...இரு கழகங்கள் மாறி மாறி வென்றால் பணநாயகமே.
Rate this:
Share this comment
Balaji - Khaithan,குவைத்
24-அக்-201911:18:56 IST Report Abuse
Balajiஎன்ன மரியா சார் முற்றிலும் மாறிவிடீர்கள் போல தெரிகிறதே...
Rate this:
Share this comment
vidhuran - chennai,இந்தியா
24-அக்-201914:28:01 IST Report Abuse
vidhuranமரியா அல்போன்ஸ் மாறிவிட்டாலும் அவர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X