பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் இலவச லட்டு

Updated : அக் 24, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி (அக்.,27) முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலிலும் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்குவது குறித்து தக்கார்கருமுத்து கண்ணன் தலைமையில் இணைகமிஷனர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தினர். பின்னர், தீபாவளி அன்று முதல் பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம்இலவசமாக வழங்கப்படும், என கோயில் நிர்வாகம் அறிவித்தது. தரிசனம் முடிந்து வெளியே வரும் போது லட்டு வழங்கப்படும்.மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானை போற்றும் விதமாக லட்டுக்கு பதிலாக பிட்டு வழங்க ஹிந்து அமைப்பினர் கோரினர். பிட்டு ஒரே நாளில் கெட்டு விடும். பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்பதால் பிரசாதமாக லட்டு வழங்கப்படவுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
24-அக்-201913:04:09 IST Report Abuse
Ram மிக்க மகிழ்ச்சி! நமது கருத்து களத்தில் சீறி பாயும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்! வாழ்க - வளர்க!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X