பொது செய்தி

தமிழ்நாடு

புதிதாக 6 மருத்துவ கல்லுாரிகள் தமிழகத்தில் துவக்க அனுமதி

Updated : அக் 25, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (13+ 18)
Advertisement
 புதிதாக 6,மருத்துவ கல்லுாரிகள் ,தமிழகத்தில், துவக்க, அனுமதி

சென்னை:தமிழகத்தில், புதிதாக ஆறு மருத்துவக் கல்லுாரிகள் துவக்க, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஆறு மருத்துவக் கல்லுாரிகளும், 1,950 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன.தமிழகத்தில், 23 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.


கோரிக்கை ஏற்பு



இதுதவிர, அரசு கட்டுப்பாட்டில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி, ஐ.ஆர்.டி., பெருந்துறை மருத்துவக் கல்லுாரி, சென்னை, கே.கே.நகர் - இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியும் உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக, ஆறு மருத்துவக் கல்லுாரிகள் துவக்கப்பட உள்ளன. இதுதொடர்பான, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என, ஆறு நகரங்களில், மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு மருத்துவக் கல்லுாரியும், தலா, 325 கோடி ரூபாய் செலவில், ஆறு மருத்துவக் கல்லுாரிகளும், 1,950 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன. இதில், 1,170 கோடியை மத்திய அரசும், 780 கோடி ரூபாயை மாநில அரசும் வழங்கும். இடங்கள் தேர்வுமருத்துவக் கல்லுாரிகளுக்கான இடங்கள், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டதால், விரைவில் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, தமிழக அரசின், 23 மருத்துவக் கல்லுாரிகள் மற்றும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று மருத்துவக் கல்லுாரிகளில் சேர்த்து, 3,600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. புதிதாக அமையவுள்ள ஆறு மருத்துவக் கல்லுாரிகள் செயல்பாட்டுக்கு வந்தால், ஒவ்வொன்றிலும் தலா, 150 இடங்கள் என, 900 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாக கிடைக்கும். அத்துடன், தமிழக கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகள் எண்ணிக்கை, 32 ஆக உயர்வதுடன், எம்.பி.பி.எஸ்., இடங்கள் எண்ணிக்கையும், 4,500 ஆக உயரும்.


பிரதமருக்கு நன்றி



தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி இல்லாத மாவட்டங்களான விருதுநகர்,
ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரியில் அரசு மருத்துவ கல்லுாரி அமைக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். என் கோரிக்கையை ஏற்று ஆறு மாவட்டங்களிலும் அரசு மருத்துவ கல்லுாரி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆறு அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுமதி பெறுவது, ஒரு வரலாற்று நிகழ்வு.இதற்கென 1,950 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி அதில் 1,170 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் பங்காக 780 கோடி ரூபாய் வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய
பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி.
பழனிசாமி, தமிழக முதல்வர்

Advertisement




வாசகர் கருத்து (13+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
24-அக்-201911:24:14 IST Report Abuse
GMM புதிய 6 மருத்துவ கல்லூரிகளுக்கு தேவையான அளவு மருந்து ஆளுநர், பணி பெண் கல்லூரிகள் வேண்டாமா? இந்திய ஆயுர்வேத, சித்த மருத்துவ கல்லூரிகள் அதிகரிக்கலாம். ராமதாஸ், அன்புமணி போன்றோர் மருத்துவ பட்டம் பெற்று பணிபுரியாமல் இருந்தால், அரசின் இழப்பு ஈடு செய்யப்பட வேண்டும். என்ஜினீரிங் கல்லூரிகள் அதிகரித்து, பாலிடெக்னிக், ITI அதிகம் துவங்கி இருந்தால், வேலை வாய்ப்பு நிலைமை மாறுபட்டு இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
24-அக்-201910:07:15 IST Report Abuse
ganapati sb ஆர்வத்தோடு நீட் எழுதும் மாணவர்களின் தேவைக்கேற்ப கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-அக்-201909:30:10 IST Report Abuse
Pugazh V மீண்டும் மீண்டும் இட ஒதுக்கீடு என்று வெறுப்பை கக்காதீர்கள். எப்போது பார்த்தாலும் இட ஒதுக்கீடு என்று எழுதிக்கொண்டே இருக்கும் நண்பர்கள் அறிவது: 1. இட ஒதுக்கீடு இல்லாத கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ், இன்போஸிஸ், ப்ளிப்கார்ட், பே.டிஎம், ஊபர், ஓலா, அனில் அம்பானியின் கம்பெனிகள், ஏர்டெல், நோக்கியா, போன்ற ஏராளமான நிறுவனங்கள் நஷ்டம் அடைந்து மூடும் நிலைக்கு ஆளாகின்றனர் என்பது தெரியவில்லையா? நாலு அரசு நிறுவனங்கள் நஷ்டம் என்றால், கூடவே 20 தனியார் நிறுவனங்களும் நஷ்டமடைவதைப் பார்க்கலாம். ஐசிஐசிஐ வங்கியில் ஏது இட ஒதுக்கீடு? அங்கே என்ன வாழ்கிறது? கோவை தனியார் மருத்துவமனைகளில், 40% மருத்துவ மனைகள் நஷ்டத்தில் ஓடுகின்றன. டிவிஎஸ் நம்மவா கம்பெனி தானே? அங்கே யும் இதே நிலை தானே? டிவிஎஸ் profit margin 3.49% மாக குறைந்துவிட்டதே? பிற அனைத்து இருசக்கர வாகன நிறுவனங்களுமே, 12% க்கும் அதிகமான profit margin ல் இயங்குகின்றன. எனவே . நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X