திருப்பம் வரும் காலம்...

Added : அக் 23, 2019
Advertisement

ராமஜென்ம பூமி வழக்கு குறித்த இரு தரப்பு விவாதங்கள் முடிந்து தீர்ப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இத்தடவை விசாரித்த விதம் சிறப்பானது. தலைமை நீதிபதியாக இருப்பதால் அவர் அணுகிய விதத்தால் பாராட்டு பெறுகிறவர் என்பதை விட இந்த வழக்கு அலகாபாத் ஐகோர்ட் படிகள் அதற்கு முன் உ.பி.யில் பைசாபாத் கீழ் கோர்ட் படிகளில் தவழ்ந்திருக்கிறது என்பதும் நினைவுக்கு வரும்.ராமர் பிறந்த இடம் என்பது இந்த நாட்டில் காலம் காலமாக போற்றப்படும் வணங்கப்படும் இடம். தமிழகத்தில் சிலப்பதிகாரத்தில் கோவலன் பொருட்செலவு செய்தபின் மதுரை வந்தபோது கண்ணகியிடம் கவுந்தியடிகள் என்ற பெண் சாமியார் கூறிய ஆறுதல் மொழிகளிலும் இடம்பெற்ற விஷயம். அதில் ராமன் என்ற 'வேதமுதல்வன் பயந்தோன்' மனைவியுடன் தந்தைசொல் காக்க கானகம் புகுந்தபின் சீதையை இழந்து துயருற்றதை நீ அறிய மாட்டாயா' என ஆழமாக கூறப்படுகிறது. அதிலும் அந்த வரலாறு 'நெடுமொழி அன்றோ' என கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.ராமன் கண்ணபிரான் ஆகிய கடவுளர் மனிதராக நடமாடிய செயல்களை இலக்கியம் போற்றுகிறது. அத்துடன் தெய்வீக மொழிகள் அதனை உணர்த்துகின்றன. அப்படியிருக்க இன்று ராமர் பிறந்த இடம் குறித்த சர்ச்சை சுதந்திர இந்தியாவில் நீடிப்பது நம் மதச்சார்பின்மையின் பாரபட்ச அணுகுமுறைக்கு உதாரணம்.பாபர் என்ற இஸ்லாமிய மன்னர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல; அவர் ஆட்சியில் அம்மதம் வளர அவர் ஆட்சி தொடர மற்றவர்களை அழித்ததை இயல்பாக பல நாட்டு வரலாறுகளை அறிந்தவர்கள் ஏற்பர்.
அதற்காக ராமபிரான் பிறந்ததாக கருதி போற்றப்பட்ட இடத்தில் மசூதி கட்டியதால் அவர் காலத்தில் அந்த அடக்குமுறையை எதிர்க்க முடியாத சமுதாயம் அல்லது போராடி வெல்ல முடியாத சமுதாயமாக இருந்ததே என்பது வரலாற்றுப் பதிவாகும்.இப்போது இந்த வழக்கில் சில விஷயங்கள் தெளிவாக்கப்பட்டுள்ளன. நாட்டில் அதிகமாக பேசப்பட்ட பிரச்னை இது. ஏற்கனவே நடந்த பாபர் மசூதி தகர்ப்பு சம்பவம் தேவையற்றது என்றாலும் எப்போதும் மத அல்லது இன அல்லது குறிப்பிட்ட இடம் யாருக்கு என்ற மோதல் வரும்போது இம்மாதிரி ஒன்றிரண்டு சம்பவங்கள் சட்டத்தை மீறி அரங்கேறும். வீணாக பழங்கதைகள் பேசுவது என்ற கருத்தைவிட ஒரு நாட்டின் வரலாற்றை அறியாத சமுதாயம் எளிதில் அதன் கலாசாரத்தை தொலைத்துவிடும். உலக அரங்கில் எகிப்து பிரமாண்டமான கலாசாரம் கொண்டது.
அதே போல கிரீஸ் நாடும் தான். இன்று இந்த இருநாடுகளின் கலாசாரம் என்ன ஆனது? ஆங்கில கலாசாரம் வேரூன்றி விட்டது.ஆகவே வழிபாடு அல்லது சில சமுதாய நன்னெறிகள் காலத்திற்கு ஒவ்வாதவை என்று கூறி அதைத் சட்டத்தால் தள்ளுவது நாகரிகத்தை சிதைத்து விடும். கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் அடிமையாக இருந்த போதும் நமது கலாசார வேர்களை காப்பாற்றும் மையங்களாக நமது வழிபாட்டு தலங்களும் மொழி இலக்கியங்களும் உள்ளதே அதற்கு சான்று.இன்று இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரில் தாங்கள் உரிமை கொண்டாடப் போவதில்லை என இஸ்லாமில் ஒரு பிரிவான 'சன்னி இஸ்லாமிய பிரிவு' தெளிவாக கூறியிருக்கிறது. அயோத்தியில் வாழும் முஸ்லிம்களும் அதே கருத்துடையவர்கள் தான்.அதேபோல இந்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட சில ஆவணங்களில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் அயோத்தியில் வாழ்ந்த சில முஸ்லிம் பெரியவர்கள் தங்களுக்கு இந்த இடத்தை வைத்திருப்பதில் ஆர்வம் இல்லை என்பதும் இத்தடவை வெளியான சில தகவல்கள்.ஆனாலும் சில முஸ்லிம் அமைப்புகள் தங்கள் இடத்தை விட்டுத் தர விரும்பவில்லை. அதே மாதிரி முஸ்லிம் தரப்பு வக்கீல் தவான் அயோத்தி ராமர் கோவில் ஆவணப்படங்களை கோர்ட்டில் கிழித்தெறிந்த செயல் அவர் தன் தரப்பு வாதிகளுக்கு நன்றி பாராட்டியதின் அடையாளமாக கருதலாம். அச்செயலை தலைமை நீதிபதி கண்டித்தது சிறப்பாகும்.அத்துடன் தலைமை நீதிபதி கோகாய் தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்ற நீதிபதி பாப்டே அடுத்த தலைமை நீதிபதியாக அதிக வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் இந்த வழக்குக்கு உள்ள தீர்ப்பு சிறப்பாக வெளிவர வாய்ப்பைத் தருவன.மேலும் இத்தீர்ப்பு இந்த நாட்டில் ஹிந்துக்கள் மற்ற மதத்தினர் அதிக இணக்கத்துடன் எதிர்காலத்தில் வாழ்வதை உறுதி செய்யும் வகையில் அமைவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இதன்மூலம் வரலாற்றில் பெரும் திருப்பம் ஏற்படும் என்பது உறுதி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X