கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சட்டவிரோத பேனர் விவகாரம் : ஐகோர்ட்டில் அ.தி.மு.க., உத்தரவாதம்

Updated : அக் 25, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (3+ 6)
Advertisement
அ.தி.மு.க., உத்தரவாதம், சட்டவிரோதம், சுபஸ்ரீ

சென்னை:தி.மு.க.,வை தொடர்ந்து, அ.தி.மு.க., சார்பிலும், சட்டவிரோதமாக, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், 'கட் அவுட், பேனர்' வைக்கக்கூடாது என, தொண்டர்களுக்கு தடை விதித்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர், சுபஸ்ரீ; மென்பொறியாளர். பள்ளிக்கரணையில், அ.தி.மு.க., பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர், சுபஸ்ரீ மேல் சரிந்தது. கீழே விழுந்தவர் மீது, தண்ணீர் லாரி ஏறியதில், மரணம் அடைந்தார்.

சம்பவம் குறித்த வழக்கை, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரணைக்கு எடுத்தது. 'அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை தடுக்க, பலமுறை உத்தரவிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. பேனர் வைக்கக் கூடாது என, கட்சியினருக்கு, தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும்' என்றனர்.


அவதுாறு வழக்கு


இதையடுத்து, சட்ட விரோதமாக பேனர் வைக்கக் கூடாது என, கட்சியினருக்கு உத்தரவிட்டு இருப்பதாக, தி.மு.க., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பேனர்கள் விவகாரத்தில், அதிகாரிகளுக்கு எதிராக, 'டிராபிக்' ராமசாமி தொடர்ந்த அவதுாறு வழக்கு மற்றும் சுபஸ்ரீ மரண சம்பவம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் முன், ஏற்கனவே விசாரணைக்கு வந்தன.

அப்போது, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, கூடுதல் போலீஸ் ஆணையர்கள் கண்காணித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்பின், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமிலியாஸ் ஆஜராகி, ''சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். சட்டவிரோத பேனர்கள் வழக்கில் விசாரணை முடிந்து, ஆலந்துார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது,'' என்றார்.

அ.தி.மு.க., சார்பில், அமைப்பு செயலர், ஜே.சி.டி.பிரபாகர் தாக்கல் செய்த மனு:கடந்த ஆண்டு டிசம்பரில், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தவுடன், எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்தனர். சட்டவிரோதமாக, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக, பேனர்களை வைக்கக் கூடாது என, அதில் கூறியுள்ளனர்.


உறுதிமொழி



இதையடுத்து, 2019 செப்டம்பரிலும், இருவரும் சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறாக, கட் அவுட், பிளக்ஸ் போர்டு, பேனர்கள் வைக்கக் கூடாது என, கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளனர். கூட்டு அறிக்கை குறித்து, நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.எங்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை நிலைநாட்டுவோம். கட்சியினரும் கண்டிப்புடன் பின்பற்றுவதை, உறுதி செய்வோம்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


விசாரணை தள்ளிவைப்பு



விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க., சார்பில் வைக்கப்பட்ட வளைவு சரிந்ததாக, 'டிராபிக்' ராமசாமி, புகைப்படங்களை தாக்கல் செய்தார். இது குறித்து, நீதிபதிகள் கேட்டபோது, தி.மு.க., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், ''எந்த தகவலும் இல்லை; சரிபார்த்து கூறுகிறேன்,'' என்றார்.

பேனர் தயாரிப்பாளர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ஞானதேசிகன் ஆஜராகி, ''மாநகராட்சி சார்பில் அனுப்பிய, நோட்டீசை, வாபஸ் பெற்று விட்டதாக தெரிகிறது. ''இருந்தாலும், எங்களின் மனுவை நிலுவையில் வைக்க வேண்டும். பேனர்கள் தொடர்பான விதிகள் குறித்து, கூடுதல் ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்கிறேன்,'' என்றார்.

சட்ட விரோதமாக பேனர்கள் வைப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கோரியும், மகள் மரணத்துக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரியும், சுபஸ்ரீ யின் தந்தை ரவி தாக்கல் செய்த மனுவுக்கு, அரசு பதில் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, நவ., 22க்கு தள்ளி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3+ 6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-அக்-201906:20:53 IST Report Abuse
Mani . V கட் அவுட், பேனர் வைக்கக் தடைக்கு ஒத்துக்க கொண்ட கட்சி தலைமையை வாழ்த்தி ஒரு ஐயாயிரம் பேனர் வைக்கணும். அப்பொழுதுதான் (அடுத்தவர்களின் மரணத்தில்) தலைமை (திமுக, அதிமுக) மகிழ்ச்சி அடையும்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-அக்-201905:46:43 IST Report Abuse
D.Ambujavalli மோடி வந்து போயாயிற்று. அடுத்து வேறொரு வெளிநாட்டு தலைவருடன் அமித் ஷா வரும் வரை இந்த பிரமாணம் இருக்கும். கோர்ட்டும் ‘இடையூறில்லாமல்’ இருப்பது கி. மீட்டருக்கு வைக்க அனுமதியளிக்கும். அவர்களும் அறுபது கி, மீ. க்கு வைப்பார்கள் இது இறுதியற்ற விஷ வட்டம்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
24-அக்-201905:02:56 IST Report Abuse
blocked user பேனர்கள் மட்டுமல்ல சட்டத்துக்கு புறம்பாக நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து இருக்கும் எல்லா ஆபத்துக்களையும் சரிபார்த்து அவற்றை நீக்கவேண்டும். இரு சக்கர வாகனஓட்டிகளுக்கு அதிக ஆபத்து. மற்ற வாகனங்களுக்கும் பாதிப்பு இல்லாமல் இல்லை. வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு கேள்வி கேட்டு பயன் இல்லை. சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். இல்லை என்றால் சிக்கலில்த்தான் மாட்டவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X