'லேண்டர்' எங்கே? 'நாசா' அறிவிப்பு

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (9)
Advertisement
NASA,lander,chandrayaan 2,லேண்டர்,எங்கே,நாசா,அறிவிப்பு,ISRO,dinamalar

வாஷிங்டன்,'நிலவை ஆராய்வதற்காக, 'சந்திரயான் - 2' விண்கலத்துடன் அனுப்பப்பட்ட, விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள, 'லேண்டர்' சாதனம் தென்படவில்லை' என, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'நாசா' கூறியுள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆராய்வதற்காக, சந்திரயான் - 2 விண்கலத்தை, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அனுப்பியது.நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக, விக்ரம் எனப் பெயரிடப்பட்ட, லேண்டர் சாதனத்தை தரையிறக்க, செப்., 7ல் முயற்சிக்கப்பட்டது. ஆனால், நிலவில் இருந்து, 2.1 கி.மீ., தொலைவில் இருந்தபோது, லேண்டர் சாதனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.





ஒரு நிலவு நாள், அதாவது, பூமியை பொருத்தவரை, 14 நாள்கள் மட்டுமே இயங்கும் வகையில், லேண்டர் சாதனம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, லேண்டர் சாதனம் செயலிழந்துவிடும். இந்த நிலையில், காணாமல் போன, விக்ரம் லேண்டர் சாதனத்தை கண்டறிய, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'நாசா' முயற்சி மேற்கொண்டது.

நாசா அனுப்பியுள்ள நிலவைச் சுற்றி ஆய்வு செய்யும் ஆர்ப்பிட்டர் சாதனம், செப்., 17ல், விக்ரம் லேண்டர் சாதனம் விழுந்ததாகக் கருதப்படும் பகுதியின் படங்களை எடுத்து அனுப்பியது.ஆனால், அதில், விக்ரம் லேண்டர் சாதனம் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நாசாவின் ஆர்ப்பிட்டர் சாதனம், இம்மாதம், 14ம் தேதி, நிலவின் தென்பகுதி குறித்து விரிவான படங்களை அனுப்பியுள்ளது. 'அவற்றிலும், விக்ரம் லேண்டர் சாதனம் தென்படவில்லை' என, நாசா தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-201909:57:05 IST Report Abuse
RM நிலவின் புவியீர்ப்பு விசை பூமியைவிட மிகக்குறைவு. லாண்டர் வெயிட் விண்வெளியில் மிகக்குறைவு, பூமியிலிருக்கும் எடையைவிட. 2K.m அப்பால் திசை மாறியது, நிலவில் போய் நிற்கும் வாய்ப்பு மிக கம்மி. விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
24-அக்-201907:30:40 IST Report Abuse
ஆப்பு சீனாக்காரன் ஏற்கனவே சந்திரனில் ஒரு லேண்டர் வெச்சிருக்கான். இழுத்துக்கிட்டுப் போயிருக்க வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
24-அக்-201907:29:18 IST Report Abuse
ஆப்பு ஐயா இந்தியாவுல இரவுன்னா அமெரிக்காவில் பகல். நாம தெற்கில் லேண்டர் விழுந்துச்சுன்னு சொன்னா அங்கே வடக்குன்னு அர்த்தம். எனவே சந்திரனின் வடக்குப் பக்கம் போய் தேடுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X