தமிழ்நாடு

பயன்பாட்டிற்கு வராமல் கோயில் பூங்கா.. முடங்கியது! ரூ.45 லட்சம் வீணடிக்கப்படும் அவலம்

Added : அக் 24, 2019
Share
Advertisement

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே கோயில் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கி கிடப்பதால்அரசு நிதி45 லட்சம் ரூபாய் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மங்கள தீர்த்தம் அருகில் ராமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி இருந்தது. இதனை அகற்றி கோயில் நிர்வாகம் அனுமதியுடன் 2016ல் தங்கச்சிமடம் ஊராட்சி நிர்வாகம்.45 லட்சம் ரூபாய் செலவில் வேம்பு, புங்கன் மரங்கள், மூலிகை செடிகள், பூச்செடிகளை வளர்த்து பூங்கா உருவாக்கினர். மக்கள் நடைபயிற்சி செல்ல பேவர் பிளாக் சாலை, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைத்தனர்.

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் இந்த பூங்கா உள்ளதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் பொழுது போக்கும் முக்கிய பூங்காவாக அமையும். ஆனால் பூங்கா உருவாக்க அனுமதித்த இந்து அறநிலையத்துறை, அதனை பராமரித்து மக்கள் பயன்படுத்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு அுமதி மறுத்தது.

இதனால் கடந்த ஓராண்டாக பூங்கா பராமரிப்பின்றி மரங்கள், மூலிகை செடிகள் தண்ணீரின்றி வாடுவதால், மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பூங்கா முடங்கியது. இதனால் அரசு நிதி 45 லட்சம் ரூபாய் வீணாகும் அவலம் உள்ளது. எனவே தங்கச்சிமடம் ஊராட்சிக்கு பூங்காவை பராமரிக்க அனுமதி வழங்கி பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர் வீராகவராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X